சாணக்கிய நீதி: பெண்கள் இந்த ரகசியங்களை கணவரிடம் எந்த சூழ்நிலையிலும் சொல்லவே மாட்டார்களாம்...
உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக சாணக்கிய நீதி திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கியே தொகுக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏராளம் போர் இருக்கின்றனர்.
வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது. அந்த வகையில் சாணக்கிய நீதியின் பிரகாரம் பெண்கள் தங்களின் கணவர்களிடம் ஒருபோதும் பகிர்ந்துக்கொள்ளாத விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்கள் மறைக்கும் ரகசியங்கள்
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் பெண்களுக்கு திருமணத்திற்கு முன்னும் பின்னும் சில தனிப்பட்ட விருப்பங்கள் இருப்பதாக குறிப்பிடுகின்றார். ஆனால் இது குறித்து பெண்கள் கணவனிடம் பகிர்ந்துக்கொள்ள ஒருபோதும் விரும்புவது கிடையாது.
அந்த வகையில் திருமணமான பெண்கள், மற்றொரு ஆண் மீது ஏற்படும் காதலை மிகவும் ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.
திருமண வாழ்க்கையை பாதிக்கும் எந்த விடயத்தையும் பெண்கள் கணவனிடம் இருந்து ரகசியமாக வைத்திருக்கின்றார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
திருமணத்திற்குப் பின்னர் கணவன்-மனைவி அனைத்து முக்கிய முடிவுகளையும் ஒன்றாக எடுக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான பெண்கள் முடிவெடுக்கும் போது தங்களின் விருப்பத்தை ரகசியமாக வைத்துவிட்டு கணவனின் முடிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.
சாணக்கியரின் கருத்துப்படி பெண்கள் மங்களின் பாலியல் ஆசைகள் , உடல் உறவின் இன்பத்தையும், திருப்தியையும் தங்கள் கணவரிடம் கூறுவதற்கு தயங்கி எப்போதும் ரகசியமாகவே வைத்திருக்கின்றார்கள்.
பெண்கள் ஆண்களை விட எப்போதும் பணத்தை சேமிக்கும் விடயத்தில் ஒரு படி மேலே இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் இந்த விடயமத்தை ஒருபோதும் தங்களின் கணவனிடத்தில் இருந்து மறைந்தது வைத்திருப்பாரை்கள்.
அவசரகாலத்தில் மனைவியின் இந்த சேமிப்பு குடும்பத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். என்ற போதிலும் குறிப்பிட்ட சமயம் வரும் வரையில் சேமிப்பு பற்றிய விடயங்களை எப்போதும் கணவனிம் ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.
சாணக்கியரின் கருத்துப்படி கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர, நாளாந்தம் பெண்களுக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகள் மற்றும் அசௌகரியங்களை கணவனிம் வெளிக்காட்டாமல் மறைத்து கொள்ளும் குணத்தை கொண்டிருப்பார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |