சரிகமப: வில் ஒரு பாடலால் உலகறியச்செய்த போட்டியாளர்! மெய்சிலிர்க்க வைத்த தருணம்
தற்போது நடைபெற்று வரும் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கருவூர் மார்ந்த யோகஸ்ரீ எனும் சிறுமி சிறப்பாக பாடலை பாடி ரசிகர்களை ஈர்த்துள்ளார். இது மக்கள் மத்தியில் பிரபலமாக்கப்பட்டு வருகின்றது.
சரிகமப
தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் இன் மெஹா ஆடிசன் நடைபெற்று வருகின்றது. இதில் பல குழந்தைகள் தங்கள் வசீகர குரலால் நடுவர்களை கவர்ந்து வருகின்றனர்.
தற்போது மெஹா ஓடிசன் முடிந்து முதல் சுற்றில் போட்டியாளர்கள் பாடி வருகின்றனர். இந்த நிலையில் கருவூரை சேர்ந்த சிறுமி ஒருவர் பிரபல பாடகிகளின் பாடலை சிறப்பாக பாடி அசத்தி வருகிறார்.
இவருடைய பாடல் திறமையை பார்த்து தமிழ்நாட்டு அமைச்சரே இவருடைய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனுடன் சேர்த்து இவர் படித்த பாடசாலைக்கும் வாழ்த்து தெரிவிததுள்ளார். இவர் மெஹா ஓடிஷனில் பாடிய ஒரு பாடல் தான் இப்போது உலகம் முழுவதும் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களில் கூட மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகின்றது.
இவர் மெஹா ஓடிஷனில் பாடிய பாடல் “ருத்துது ருத்துது“ பாடலாகும். இன்று “கண்ணமூடி கண்ட கனவே“ பாடல் பாடி அதற்கு கோல்டன் பெர்போமன்ஸ் நடுவர்களிடம் இருந்து பாராட்டு பெற்றுள்ளார்.
இவ்வளவு அழகாக பாடல் பாடுவதால் நடுவர்கள் இவரை இறுதிச்சுற்று வரை வருவார் என பாராட்டியுள்ளனர். இது தவிர இந்த சிறுமி பாடுவதற்கு தான் பிறந்துள்ளார் என்றும் இவர் பாடிய பாடலை எஸ் பி சரண் இசையமைப்பாளர்களுக்கு பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளார்.
இவரின் பாட்டு திறமையால் இவரின் தந்தைக்கும் இவர் பெருமை சேர்த்துள்ளார். இத்தனை பாராட்டுக்கள் பெற்ற யோகஸ்ரீ இறுதிச்சுற்று வரை வருவாரா என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |