Bigg Boss Tamil 9: எனக்கு அவ பண்றது பிடிக்கல- அரோராவை கிழித்தெடுத்த ரியா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரோராவின் செயலை தண்டிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதற்கான பதில் காணொளியை ரியா வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒரு வாரத்தைக் கடந்திருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
கடந்த சீசன்களைப் போல அல்லாமல் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய நபர்கள் தான் இந்த போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வாட்டர் மெலன் திவாகர், ஆதிரை, கனி, கலை, வி.ஜே.பார்வதி, விக்னேஷ், கம்ருதின் என 20 பேர் தெரிவு செய்யபட்டுள்ளனர்.
இதற்கு மக்களிடையில் பல விமர்சனங்களும் வந்துகொண்டு இருக்கின்றது. முதல் வாரத்தில் பல சண்டைகள் நடந்து அதில் பிரவின் காந்தி வெளியேற்றபட்டார்.
இப்போது 10 நாள் நடந்துகொண்டு இருக்கின்றது. இதில் அரோராவின் செயலை பார்த்து ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதற்கு அவருடைய நண்பியிடமும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு ரியா தற்போது பதில் காணொளி வெளியிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |