தவமிருந்து கிடைத்த சீரியல் வாய்ப்பை உதறிய நடிகை.. இது தேவையா? கலாய்க்கும் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியல் வாய்ப்பிற்காக ரித்திகா தவமிருந்தாகவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சீரியலிலிருந்து வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் குடும்ப வாழ்க்கை மற்றும் பெண்களின் துணிச்சல் இவை இரண்டையும் கருப் பொருளாக கொண்டு சீரியல் நகர்ப்படுகின்றது.
அந்த வகையில் தற்போது பாக்கியா - இனியாவை அழைத்து கொண்டு கேரளா வரை சென்றுள்ளார்.
அப்போது பொலிஸார் விசாரணைக்காக ஹோட்டலிற்குள் நுழைகிறார்கள்.
பயந்து போன ஈஸ்வரி கோபிற்கு கோல் செய்து நடந்த விடயங்களை கூறுகிறார்.
ரித்திகாவின் அதிரடியான என்ட் ரீ
இது ஒரு புறம் இருக்கையில், அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த ரித்திகா திடீரென சீரியலிருந்து விலகியுள்ளார்.
இவர் கதாபாத்திரத்தில் அக்ஷிதா நடித்து வருகிறார்.
மாறாக ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வேண்டும் என இயக்குநரிடம் தவமிருந்து கேட்டுக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
இதனை தொடர்ந்து சீரியலிருந்து விலகிய அமிர்தா தற்போது ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 ல் களமிறங்கியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்த இணையவாசிகள், இதற்காகவா சீரியலிலிருந்து விலகினீர்கள்..?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |