தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாராவுக்கு நடந்த ஆபத்தான அறுவை சிகிச்சை! வைரல் பேட்டி
வி.ஜே அர்ச்சனாவின் மகள் சாராவிற்கு கர்ப்பபையில் நடந்த ஆபத்தான அறுவை சிகிச்சை பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

வி.ஜே அர்ச்சனா
மக்கள் மனதில் அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளியாக வலம் வருபவர் தான் வி.ஜே அர்ச்சனா.
இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருக்கு ஒரே ஒரு மகள் உள்ளார். அவரின் பெயர் சாரா. சாரா எப்போதும் தனது வயதைத் தாண்டிய மெச்சூரிட்டியுடன் பேசுவார்.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருககும் அர்ச்சனா தனது மகள் எதிர்கால வாழ்க்கையுடன் போராடிய தருணத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

சாராவிற்கு 8 வயதில் வந்த சோதனை
அர்ச்சனா கூறும் போது 'மரணத்தை மிக அருகில் பார்த்துவிட்டு வந்த குழந்தைகளுக்கு ஏன் இவ்வளவு முதிர்ச்சி இருக்கிறது என்று யாரும் கேட்கவே கூடாது.
சாரா எட்டு வயதாக இருக்கும்போது ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. அவளுக்கு அப்போது உயிர் போய்விட்டு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அவளைக் காப்பாற்ற முடியுமா? முடியாதா? என்றே தெரியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம்.
அவளது உடலில் இருக்கும் இரண்டு ஓவரிகளில் இருந்து ஒரு சிறிய பைப் போன்ற நரம்பு கர்ப்பப்பையுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு ஓவரியில் பலமுறை நரம்புகள் ஒன்றோடு ஒன்று சுற்றிக்கொண்டன.

இதனால் அவளுக்குக் கடுமையான வலி மற்றும் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அதைச் சரிசெய்துவிட்டு, பர்மனென்ட்டாக அங்கு கிளிப் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார்கள்.
அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள், அந்த அறுவை சிகிச்சை நடக்கும்போது, சாராவுக்குக் கடுமையான பாதிப்பு இருந்தால் அவளது கர்ப்பப்பையையே எடுக்க வேண்டிய சூழ்நிலை கூட வரலாம் என்று சொன்னார்கள்.
அந்த வார்த்தையைக் கேட்டதும் ஒரு தாயாக என் உலகமே இருண்டுவிட்டது.
எட்டு வயதே நிரம்பிய ஒரு சிறுமிக்குத் தன் கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்றால், எதிர்காலத்தில் இவள் தாயாக முடியுமா முடியாதா? என்ற ஒரு கொடுமையான நிலையில்தான் அவள் ஆபரேஷன் தியேட்டருக்குள் இருந்தாள்.

உள்ளே அவளுக்குப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. வெளியே நாங்கள் அழுதுகொண்டே துடித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அது கடவுளின் அனுகிரகமோ, இல்லை நான் செய்த புண்ணியமோ, என் பெற்றோர்கள் செய்த புண்ணியமோ தெரியவில்லை.
அறுவை சிகிச்சை முடிந்து மீண்டு வந்துவிட்டாள், அவளுக்கு இனி எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, கர்ப்பப்பை மிகவும் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்று சொன்னார்கள். அதைக் கேட்ட பிறகுதான் எங்களுக்கு உயிரே வந்தது' என்று மிகவும் உணர்வுபபூர்வமாக அவர் பேசி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |