குரு பாரதிராஜா மறைவின் 17 நாட்களின் பின் பாக்கியராஜ் மறைவு! சோகத்தில் திரையுலகம்
குரு பாரதிராஜா இறந்த 17 நாட்களில் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என புகழ்பெற்ற பாக்கியராஜ் இறந்துள்ளார்.

பாக்கியராஜ்
பாக்யராஜ் குருநாதர் இயக்குனர் இமயம் பாரதிராஜா இறந்து 2 வாரத்தில் அவரின் மானசீக சிஷ்யனான பாக்யராஜ் மறைந்திருப்பது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1953 ஜனவரி 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார்.
பாக்கியராஜ் தனது குருநாதர் பாரதிராஜா மீது வைத்திருந்த அன்பும் , மாரியாதையும் யாராலும் விபரிக்க முடியாது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக ஒரு சில படங்களில் பணியாற்றிய பின்பு பாக்யராஜ் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

பாக்கியராஜ் திடீர் மரணம்
பாக்யராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக இணையத் தகவல்கள் குறிப்பிடுகின்றது.
இதன் பின்னர் திடீர் மாரடைப்பு காரணமாக அவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாதரிராஜா மறைவு
கடந்த ஜூன் 10 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பாரதிராஜா சென்னையில் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் வாடிய முகத்துடன் பாக்யராஜ் , தனது மனைவி மற்றும் மகனுடன் கலந்து கொண்டார்.
குருநாதர் மறைவு குறித்து மிகவும் உருக்கமாக கண்ணீருடன் பேசி இருந்தார். பாரதிராஜாவின் மரணம் ஒட்டுமொத்தமாக பாக்கியராஜை மன வருத்ததில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அவர் மறைந்த 2 வாரத்தில் பாக்யராஜ் மறைந்திருப்பது ஒட்டு மொத்த சினிமா துறையினரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாக்யராஜ் எந்த இடத்திலும் இதுவரை பார்திராஜாவின் பெயரை குறிப்பிட்டதே இல்லையாம், எப்போது பாரதிராஜாவை “எங்க இயக்குனர்”என்றே சொல்வாராம்.
குருநாதரின் பெயரை சொல்வது கூட மரியாதையின்மை என நினைத்து வாழ்ந்தவர் பாக்கியராஜ் என தகவல் வெளியாகி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |