பெண்களுக்கு வலது பக்க மார்பு அடிக்கடி வலிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?
பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் மார்பு வலி ஏற்படுவது வழக்கமான விடயம் தான். ஆனால் பெண்களுக்கு மார்பு ஏற்படும் மார்பக வலி கொஞ்சம் பெரிய பிரச்சினையாகவே இருக்கும்.
ஆனால் இந்த மார்பு வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இது மாதவிடாய் அல்லது கர்ப்ப காலங்களில் ஹார்மோன் மாற்றங்களால் வலி ஏற்படுகிறது.
மேலும், இது புற்றுநோய் வரைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். அதிலும் பெண்களுக்கு வலது பக்க மார்பு வலிப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவை இது தான்.
வலது பக்க மார்பு வலிப்பதற்கான காரணம்
குழந்தை கட்டுப்பாட்டு மாத்திரைகள் உண்ணும் போது மார்பக வலி ஏற்படும்.
தினமும் உண்ணும் உணவில் கொழுப்பு, காபின் அளவு கூடினால் மார்பு வலி ஏற்படும்.
பொருத்தமற்ற ப்ராக்களை அணிவதால்
தாய்ப்பால் கொடுப்பதால் வலது பக்க மார்பு வலிக்கும்
மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றம் என்பவற்றாலும் அடிக்கடி வலது பக்க மார்பு வலிக்கும்
தசைப்பிடிப்பு, இடுப்பு வலி, சுளுக்கு போன்ற காரணத்திற்காகவும் வலது பக்க மார்பு வலி ஏற்படும்
நுரையீரல் பிரச்சினையாலும் இதய பிரச்சினையாலும் மார்பக வலி ஏற்படும்
மார்பக வலி ஏற்படுவது இதய பிரச்சினை ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.