ஆண் குழந்தைக்கு தாயாகிய பிரபல நடிகை... குழந்தையின் கொழுகொழு புகைப்படம் இதோ
நடிகை ரிச்சா ஆண்குழந்தையை பெற்றெடுத்த நிலையில், குழந்தையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
டெல்லியில் பிறந்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் வளர்ந்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அமெரிக்கா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார்.
அதன்பின்பு இந்தியா வந்து ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து, ராணாவின் லீடர், பிரபாஸின் மிர்ச்சி உள்ளிட்ட சில தெலுங்கு படங்களிலும், தமிழில் தனுசுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி படங்களில் நடித்தார்.
பின்பு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு, தன்னுடன் அமெரிக்காவில் எம்பிஏ படித்த சக மாணவர் ஜோ லாங்கெல்லா என்பவரை இரண்டு வருடங்களாக காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இவருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தனது குழந்தையின் கியூட் புகைப்படத்தினை வெளியிட்டுள்ள ரிச்சாவை வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றார்.
இன்றைய இணையதள ட்ரென்டிங்கில் இருக்கும் இப்புகைப்படத்தினை ரசிகர்கள் கொஞ்சி மகிழ்ந்து வருகின்றனர்.
