அரிசி மாவு மட்டும் போதும்: வாயில் வைத்தாலே கரையும் ஸ்வீட் செய்யலாம்
இனிப்பு பண்டங்கள் என்றால் யாருக்குதான் பிடிக்காது, அதுவும் பால் பொருட்களால் ஆன ஸ்வீட் என்றால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த பதிவில் வீட்டில் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஸ்வீட் ரெசிபி பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு- 5 டேபிள் ஸ்பூன்
பால்- 2 கப்
சர்க்கரை- அரை கப்
தண்ணீர்- 2 டேபிள் ஸ்பூன்
முட்டை- 2
ஏலக்காய் தூள் அல்லது வெண்ணிலா எஸன்ஸ்- ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பவுலில் அரிசி மாவு, பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும்.
மிதமான சூட்டில் நன்றாக கிளறிவரவும், 5 நிமிடத்தில் அதன் நிறம் மாறி பாகு தயாராகிவிடும், இதனை இனிப்பு செய்வதற்கான வைத்துள்ள பாத்திரத்தில் கொட்டவும்.
அடுத்ததாக அரை லிட்டர் பாலை காய்ச்சி, அரிசி மாவு கலவையை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
இதனுடன் அரை கப் சர்க்கரை சேர்க்கவும், 10 நிமிடங்களில் நன்றாக கெட்டியான பின்னர் அடுப்பை அணைத்துவிடவும்.
வேறொரு பாத்திரத்தில் 2 முட்டைகள் சேர்த்து அடித்துவிடவும், அடுத்ததாக அரிசி மாவு கலவையை சேர்க்கவும், 1 டேபிள் ஸ்பூன் அளவு வெண்ணிலா எஸன்ஸ் சேர்க்கலாம் அல்லது ஏலக்காய் தூள் சேர்க்கலாம்.
இவை அனைத்தையும் நன்றாக கலந்துவிட்ட பின்னர் ஏற்கனவே சர்க்கரை பாகு ஊற்றிய பாத்திரத்தில் சேர்க்கவும், அடுத்ததாக இட்லி பாத்திரத்தில வைத்து மிதமான சூட்டில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வேகவைத்த பின்னர் எடுத்து பார்த்தால் சுவையான ஸ்வீட் தயாராகிவிடும்.