சாதம் மீந்து விட்டதா? அப்போ நைட்டுக்கு சப்பாத்தி செய்யலாம்
பொதுவாகவே வீட்டில் யாரவது சாப்பிடாமல் போனால் அந்த சாப்பாடு அப்படி மீந்து போய்விடும். அவ்வாறு மீந்து போன உணவுகளைக் கொண்டு புது புது சுவையான ரெசிபிகளை வீட்டில் செய்து சுவைக்கலாம்.
அந்தவகையில், இன்று மீந்து போன சாதத்தில் சப்பாதி செய்யலாம் என்பது தெரியுமா? ரெசிபி இதோ,
தேவையான பொருட்கள்
சாதம் - 1 கப்
கோதுமை மா - 1/2 கப்
மைதா மா - 1/4 கப்
உப்பு, தேவையான பொருட்கள் - தேவையான அளவு
செய்முறை
முதலில் மீந்துப் போன சாதம், மைதா மா, கோதுமை மா என்பவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து எடுத்துக் கொண்ட பிறகு அதனுடன் 1/4 கப் கோதுமை மா சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
தேவையான அளவு எண்ணைய்யும் ஊற்றி நன்றாக பிசைந்து மேலாக எண்ணெய் தடவி பத்து நிமிடத்திற்கு ஊற விடவும்.
பிறகு மாவை உருண்டை உருண்டையான எடுத்து கோதுமை மா தூவி சப்பாத்தி செய்து தோசைக் கல்லில் போட்டு எடுத்தால் மிருதுவான ரைஸ் சப்பாத்தி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |