கோதுமை மாவு மட்டும் போதும்: சுவையான அச்சு முறுக்கு தயார்
நாம் பண்டிகை தினங்களில் செய்யும் பலகார வகைகளில் ஒன்று தான் அச்சு முறுக்கு.
இதனை தமிழர்களின் திகட்டாத சுவை தரும் ஒரு பாரம்பரிய இனிப்பு வகையாகவும் கூறலாம்.
மேலும் அச்சு முறுக்கு செய்வதற்கு மைதா, முட்டை மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.
அந்த வகையில் தமிழர்கள் ஸ்டைலில் எவ்வாறு அச்சு முறுக்கு செய்வது எப்படி என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - அரை கப்
நாட்டு சர்க்கரை - கால் கப்
கருப்பு எள்ளு - 1 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
செய்முறை
முதலில் முறுக்குக்கு தேவையான அரிசி மாவு மற்றும் கோதுமை மா ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு எடுத்து கொள்ளவும்.
அதனுடன் ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, உப்பு மற்றும் எள் ஆகிய பொருட்களை ஒன்றாக சேர்ந்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையில் நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தேவையென்றால் சேர்க்கலாம்.
கலந்த பின்னர் மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தோசை மா பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
தண்ணீர் சேர்க்காவிட்டால் தேங்காய் பால் சேர்க்கலாம். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அச்சு முறுக்கின் மோல்டை சிறிது நேரம் எண்ணெயில் வைக்கவும்.
அச்சு சூடானதும் அதன் மேல் முறுக்கு மாவை ஊற்றி பொரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சூடான அச்சு முறுக்கு தயார்!