காண்டாமிருக காளைகளின் மோதல்... பதறவைக்கும் வைரல் காட்சி
இரண்டு காண்டாமிருக காளைகள் ஒன்றுடனொன்று பிரந்தியத்தை ஆக்கிரமிப்பதற்காக மோதிக்கொள்ளும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மூக்குக்கொம்பன் என்னும் காண்டாமிருகம் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் பட்டியலில் யானைக்கு அடுத்த இடத்தை பெறுகின்றது.
வேகமாக அழிந்துவரும் விலங்கினங்களின் பட்டியலில் உள்ள காண்டாமிருகம், தற்போது ஆப்பிரிக்கா, இந்தியா, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் மட்டுமே இருப்பதாக ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகின்றது.
பொதுவாக காண்டாமிருகங்களின் மோதல்கள் வலிமையைக் காட்டுகின்றன, முன்னும் பின்னுமாக தள்ளும், ஆனால் கடுமையான சண்டைகள் அரிதானவை.
இந்த சந்திப்பில், வலதுபுறத்தில் உள்ள பெரிய ஆண் காண்டாமிருகம் இறுதியில் வெல்கின்றது.அனைத்து வகை காண்டாமிருகங்களுமே 1,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவையாகவே இருக்கின்றன.
இத்தகைய போர்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த உதவுகின்றன, வெற்றியாளர் பிரதான பிரதேசத்தை பாதுகாப்பதோடு, துணையை சிறந்த முறையில் அணுகலாம் என்பது அவற்குக்கிடையில் இருக்கும் விதிமுறைகளாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |