Restaurant style முட்டை குழம்பு வேண்டுமா? இப்படி செய்து அசத்துங்க
பொதுவாகவே அசைவம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது முட்டைதான். ஹோட்டலுக்கு சென்றாலும் பெரும்பாலான மக்கள் முட்டை உணவுகளை சாப்பிட விரும்புவதற்கு காரணம் அதன் சுவையும், விலையும்தான்.
மும்டை எப்போதும் கிடைக்கக்கூடிய ஒரு மலிவாக பொருளாக இருந்தாலும் இதன் சுவையும் ஊட்டச்சத்துக்களும் மிகவும் உயர்வானது.
ரெஸ்டாரன்ட்களில் பரிமாறப்படும் முட்டைக் கறியின் சுவை வீட்டில் செய்யும் முட்டை குழம்பை விட வித்தியாசமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். அப்படி Restaurant பாணியிலான முட்டை குழம்பை எவ்வாறு வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேகவைத்த முட்டை - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
சீரகம் - 1 தே.கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு
காஷ்மீர் மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1 தே.கரண்டி
கிராம்பு - 4
இலவங்கப்பட்டை - 1
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் முட்டைகளை வேகவைத்து பின்னர் குளிறவிட்டு ஓடுகளை நீக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெயை ஊற்றி, நன்கு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை ஆகிய சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் அதில் இஞ்சி, பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள மசாலா பொருட்களை சரியான அளவில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
இந்த குழம்பில் முட்டையை முழுதாக போட விரும்பினால் அப்படியே சேர்த்து சமைக்கலாம், ஆனால் முட்டையை இரண்டாக வெட்டிப் போடுவதால் குழம்பின் சுவை இன்னும் அதிகரிக்கும்.
குழம்பில் எண்ணெய் பிரிந்து சரியான பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினால் அட்டகாசமான சுவையில் Restaurant style முட்டை குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |