வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் சுவையில் பட்டர் சிக்கன் – கொத்தமல்லி சாதம்! பண்ணலாமா?
வீட்டில் வழக்கமாக செய்யும் சிக்கன் குழம்பிலிருந்து சற்று வித்தியாசமாகவும், ரெஸ்டாரன்ட்டில் பரிமாறப்படும் உணவின் சுவையையும் மணத்தையும் வீட்டிலேயே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பட்டர் சிக்கள் மற்றும் கொத்தமல்லி சாதம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
பட்டர் சிக்கன் – கொத்தமல்லி சாதம்

க்ரீமி தன்மை கொண்ட பட்டர் சிக்கனும், புதிதாக அரைத்த கொத்தமல்லியின் நறுமணம் நிறைந்த சாதமும் இணையும் இந்த காம்பினேஷன், சாதாரண மதிய உணவையே ஒரு சிறப்பு விருந்தாக மாற்றிவிடும்.
மென்மையாக வேகவைக்கப்பட்ட சிக்கன் துண்டுகள், தக்காளியின் புளிப்பும், மசாலாக்களின் மணமும், பட்டரின் ருசியும், க்ரீமியின் மென்மையான சுவையும் ஒன்றாக கலந்து உருவாகும் இந்த கிரேவியுடன் கொத்தமல்லி சாதத்தை சாப்பிட்டால் மீண்டும் மீண்டு செய்து தர சொல்லி கேட்க தோன்றும்.
அந்தளவுக்கு அதன் சுவையும் மணமும் பக்காவாக இருக்கும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டே இந்த உணவைத் தயாரிக்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. எளிய முறையில் இந்த ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என இந்த காணொளி மூலம் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |