பற்களின் மஞ்சள் கறையை அகற்ற வேண்டுமா? வீட்டில் உள்ள பொருட்களே போதும்
ஒருவரின் ஆளுமை அழகை வெளிக்காட்டுவது வெள்ளை மற்றும் பளபளப்பான பற்கள் ஆகும். முத்துக்களைப் போலப் பிரகாசிக்கும் பற்கள் இருந்தால் ஈர்க்க முடியும். அதே சமயம் மஞ்சள் மற்றும் அழுக்கு படிந்த பற்களால் பல சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம்.
பற்கள் சுத்தமாக இல்லாவிட்டால், வெளிப்படையாக வாய்விட்டுச் சிரிக்க கூட முடியாது. இதற்கு காரணம் குட்கா மற்றும் வெற்றிலை உட்கொள்வது, புகைபிடித்தல், மோசமான வாய் பராமரிப்பு அல்லது தவறான உணவு முறை போன்ற பல காரணங்களாகும்.
இதனால் ஒரு சிலர் மஞ்சள் மற்றும் அழுக்குப் படிந்த பற்களை வெண்மையாக்க, கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த பல் பொடியைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இதை விட இதற்குப் பதிலாக இயற்கையான பொருட்களைக் கொண்டு, வீட்டிலேயே பற்களை வெண்மையாக்கும் வழிமுறைகளை உருவாக்க முடியும். இதனால் நமது பணமும் நம்மிடம் சேமிக்கப்படும். அது என்ன வழிமுறை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் கறையை போக்குதல்
எலுமிச்சை சாறு பற்களை வெண்மையாக்கும் ஒரு இயற்கை காரணியாகும். இந்த சாறில் நீங்கள் பேக்கிங் சோடாவை போட்டு பற்களில் தேய்க்கும் போது பற்களில் அகற்ற முடியாத கறைகளையும் அகற்றலாம்.
ஆயில் புல்லிங் என்பது இந்தியாவில் பற்களை வெண்மையாக்கும் ஒரு பாரம்பரிய முறையாகும். இது முழு வாய் பிரச்சனையையும் நீக்குகிறது. ஆயில் புல்லிங் செய்ய வாயில் எண்ணெயை எடுத்து சுழற்ற வேண்டும். இதற்கு சூரியகாந்தி எண்ணெய், எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும்.
ஆயில் புல்லிங் செய்ய, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை எடுத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் ஊற வைக்கவும். வினிகர் பொதுவாக கடைகளில் கிடைக்கக்கூடியது.இது வாயில் உள்ள கிருமிகளை நீக்கி வாயை சுத்தமாக வைத்துக்கொள்கிறது.
இதற்கு காரணம் இதில் உள்ள மிதமான அமிலம்தான் காரணம். ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்துகொள்ளவேண்டும். இதை வாயில் ஊற்றி மெதுவாக கொப்பளிக்கவேண்டும்.
பின்னர் இதை துப்பிவிட்டு சாதாரண தண்ணீரில் வாயை கொப்பளிக்கவேண்டும். பற்களை வெண்மையாக்கும் முக்கிய பங்கு என்றால் அது சார்கோல் ஸ்கிரப் தான். இத ஒரு இயற்கை நிவாரணியாகும்.
இதை ஈரமான பிரஷை ஆக்டிவேடட் சார்கோல் ஸ்கிரபில் தோய்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பற்களை அதைவைத்து இரண்டு நிமிடங்கள் பிரஷ் செய்ய வேண்டும். இதை வாரத்தில் இரண்டு முறை செய்தால் போதம் பற்கள் வெண்மையாக வரும்.
பற்களை வெண்மையாக்க பயன்படுவதில் முக்கியமானது ஹைட்ரோஜென் பெராக்ஸைட் எனும் வேதிப்பொருட்களாகும். இதனுடன் பேக்கிங் சோடா கலந்து பற்களில் பூசினால் பற்கள் பளிச்சென்று வரும்.
யாரும் பின்பற்றாத ஒரு விஷயம் நாம் எப்போதும் பின்பற்றாதது இது. கடினமான பொருட்களை எப்போதும் கடித்து உண்ண வேண்டும். அப்படி உண்ணும் போது பற்கள் உறுதியாக இருக்கும்.பச்சையாக பழங்கள் மற்றும் காய்கறிகளை கடித்து சாப்பிடுவது, கேரட்கள், ஆப்பிள்கள் ஆகியவற்றை கடித்து சாப்பிட்டால் அவை உங்கள் பற்களை இயற்கையாக சுத்தம் செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |