பெண்கள் அவசியம் செய்துக்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்... என்னென்ன தெரியுமா?
தற்காலத்தில் பெரும்பாலான பெண்கள் வீட்டு பொறுப்புகளை ஏற்று வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இதில் வீட்டு வேலைகளையும் முழுமையாக கவனித்துக்கொண்டு குழந்தைகளையும் பராமரித்துக்கொண்டு அலுவலக வேலைக்கும் செல்கின்ற பெண்கள் ஏறாளம்.
இப்படிப்பட்ட பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
ஆனால் ஆண்களை பார்க்கிலும் பெண்களை குறிவைத்து தாக்கும் பல ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கின்றது.
இதனை பெண்கள் அலட்சியப்படுத்துவது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து அக்கறை செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்க்கின்றனர்.
அப்படி பெண்கள் அவசியம் செய்துக்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மருத்துவ பரிசோதனைகள்
உயரத்திற்கேற்ற எடை என்ற விகிதத்தைக் குறிக்கும் பிஎம்ஐ (BMI) அளவீடு, ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. எனவே இந்த பரிசோதனையை பெண்கள் நிச்சயம் செய்ய வேண்டும். உங்கள் உயரத்துக்கு ஏற்ற வகையில் உடல் எடையை பராமரித்துக்கொள்ள இது பெரிதும் துணைப்புரியும்.
இரத்த சோகை பரிசோதனையை அவசியம் செய்துக்கொள்ள வேண்டும்.என்பது இரத்தத்தில் உள்ள ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு இல்லாததால் உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கல் குறைக்கப்படும் ஒரு நிலை ரத்த சோகையாகும்.இது பெண்களை அதிகம் பாதிப்பதால் இந்த பரிசோதனையை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்கள் மாதவிடாய், கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் என காலகட்டங்களுக்கு முகம்கொடுக்க நேரிடுவதால் ஹோர்மோன் மாற்றங்கள் மற்றும் வைட்டமின் குறைப்பாடுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. எனவே வைட்டமின் குறைப்பாட்டு பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
உயர் இரத்த அழுத்தம் ஆரோக்கியத்திற்கு பெரிதும் ஆபத்தானது, மேலும் இது சிறுநீரக பிரச்சினைகள், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கு இது முதல் காரணமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை தவறாமல் பரிசோதிப்பது அவசியம்.
நீரிழிவு நோயைக் கண்டறிவதற்கும் கண்காணிப்பதற்கும் ரத்ததில் குளுகோஸ் அளவு சரியாக இருக்கின்றதா என்பதை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
மார்பக மற்றும் கர்ப்ப்பை புற்றுநோய்களின் தாக்கம் பெண்கள் மத்தியில் அதிகரித்து வருவதன் காரணமான அவசியம் இந்த பரிசோதனைகளை செய்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எலும்பு ஆரோக்கிய பரிசோதனை, எலும்பு அடர்த்தி சோதனை அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் ஸ்கிரீனிங் என்றும் அறியப்படும், இது எலும்பு வலிமை மற்றும் அடர்த்தியை மதிப்பிடுவதற்கான சோதனையை 30 வயதை கடந்த பெண்கள் நிச்சயம் செய்துக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் 50 வயதை கடந்த பெண்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் அபாயம் அதிகமாக காணப்படுவதால் இதனை பரிசோதனை செய்ய வேண்டியதும் முக்கியமாகும்.
தற்காலத்தில் அழகுசாதன பொருட்களின் பாவனை பெண்கள் மத்தியில் அதிகரித்து வருவதனால் தோல் புற்றுநோய் அபாயம் பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.எனவே இந்த பரிசோதனையையும் அவசியம் செய்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |