3 நாட்களில் கருவளையம் நீங்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு இயற்கை பொருள் போதும்
பெரும்பாலான பெண்கள் கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கருவளையம் வந்து விட்டால் மனதளவில் சோர்வடைய செய்து விடுவர். அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது.
உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் நமக்கு உணர்த்துகிறது. இவற்றை தடுக்க கண்ட கண்ட கிறீம்களை உபயோகிப்பதை தவிர்த்து விட்டு சில எளிய இயற்கை முறைகளை பின்பற்றினாலே போதும். அந்தவகையில் தற்போது கருவளையத்தை மூன்றே நாளில் போக்க கூடிய ஒரு எளிய வழிமுறை ஒன்றை தற்போது பார்ப்பாம்.
தேவையானவை கற்றாழை உருளைக்கிழங்கு சாறு தக்காளி சாறு விட்டமின் E ரோல் வாட்டர் செய்முறை முதலில் கற்றாழையுடன் உருளைக்கிழங்கு சாற்றை 1/2 ஸ்பூன் எடுத்து அதில் ஊற்றிவிடவும். பின்னர் தக்காளி சாறு 1/2 ஸ்பூன் எடுத்து அதில் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு விட்டமின் E 2 மாத்திரை எடுத்து சேர்த்து கொள்ளவும். நன்றாக கலந்து இறுதியாக ரோல் வாட்டரையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதன் பின் கண்களை சுற்றி 20 நிமிடங்கள் சேர்த்து மசாஜ் செய்து கொள்ளவும்.
இரவு தூங்க போகும் முன் இதனை செய்வது நல்லது. தொடர்ந்து செய்து வந்தால் 3 நாட்களிலே பலன் தெரிவதை காணலாம்.
இது கருவளையத்தை மட்டுமல்லாமல் இறந்த செல்களையும் நீக்கவும் உதவி புரிகின்றது.