திருமண தடை நீங்கி விரைவில் திருமண நடைபெற வேண்டுமா? செய்ய வேண்டிய பரிகாரம்
பலருக்கும் திருமணம் எளிதில் கை கூடாமல் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும்,. கை நிறைய சம்பளம், நல்ல வேளை இருந்தாலும், காரணமே இல்லாமல் திருமணம் கை கூடாமல் இருக்கும்.
இதற்கு செவ்வாய் தோஷம், பித்ரு தோஷம், நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
இதனிடையே , திருமண தடைகள் அனைத்தும் நீங்க சில எளிய பரிகாரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் தோஷம்
செவ்வாய் தோஷம் மிக கடுமையாக இருந்தால் திருமணம் நடைபெறாது என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். அதற்கு முருகனுக்கு உகந்த செவ்வாய்கிழமை அன்று, முருக பெருமானை வணங்கி விளக்கேற்றி வழிபட்டால், பல வகை தோஷங்களால் ஏற்படும் தடைகள் நீங்கி திருமணம் விரைவில் நடைபெறும்.
மேலும், வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள செவ்வாய் பகவானை வழிபட்டு முத்துக்குமார சுவாமியை வணங்கினால், விரைவில் திருமணம் கை கூடும்.
சங்கட ஹர சதுர்த்தி
திருமண தடை நீங்க விக்னங்களை அனைத்தையும் நீக்கும் விநாயகரை வழிபட்டு வர தடைகள் நீங்கி விரைவில் நாதஸ்வர ஒலியை விரைவில் கேட்கலாம்.
இதனால், சுந்தரகண்டம் பாராயணம் செய்வதும் திருமண தடைகளை நீக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், சுந்தரகாண்டத்தை தொடர்ந்து பாராயணம் செய்வது நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை. 21 நாட்கள் தொடர்ந்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதன் மூலம் திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும்.
இதுமட்டுமின்றி சிவலிங்கத்திற்கு தவறாமல் அபிஷேகம் செய்வதினாலும் திருமணம் கை கூடும். அபிஷேக பிரியன் சிவனை மனம் குளிரச் செய்ய, சிவலிங்கதிற்கு பசும் பால் கொண்டு அபிஷேகம் செய்யலாம்.
மேலும் சிவனுக்கு பிடித்த வில்வ இலைகளையும் அர்ப்பணிக்கலாம். இதனால், சிவபெருமான் உங்கள் மன ஆசைகளை நிறைவேற்றுவார்.
இதனால் 16 திங்கட்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருப்பதும் திருமணம் கை கூடி மணதிற்கு பிடித்த துணை கிடைக்கும்.