திருமண தடை நீங்க துர்க்கை அம்மனை எப்படி வழிபட வேண்டும்?
திருமண தடை நீங்க துர்க்கை அம்மனை செவ்வாய் கிழைமகளில் வழிபாடு செய்வது முக்கியம். அதேப்போன்று துர்க்கை அம்மனை ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட வேளையில் வழிபாடு செய்து வந்தால் திருமண தடை நீங்குமாம்.
ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமையில் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள், புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும். கோவிலில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.
திங்கள்
திங்கட்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள், துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இப்படி செய்வதால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும். மேலும் வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும்.
செவ்வாய்
செவ்வாய் கிழமையில் மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்தியம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
புதன்
புதன் கிழமையில் மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரிசெய்து விளக்கேற்றி, புளியோதரை நைவேத்தியம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிடைக்கும். மேலும் ரத்த சம்பந்தமான நோய் ஏதாவது இருந்தால் நீங்கும்.
வியாழன்
வியாழக்கிழையில் மதியம் 1.30 மணி முதல் 3 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம் பழம் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மேலும் இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
வெள்ளி
வெள்ளி கிழமையில் காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் துர்க்கையை வழிபட வேண்டும். இது மற்ற நாட்களை விட மிகவும் ஏற்றம் தரும் காலம் ஆகும். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும்.
சனி
காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
இதனால் வேலைவாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும்.