மூக்கைச் சுற்றியிருக்கும் பிடிவாதமான கரும்புள்ளி - 1நிமிடத்தில் போக இதை செய்ங்க
மூக்கை சுற்றி இருக்கும் விடாப்பிடியான கரும்புள்ளியை போக்க எளிமையான வீட்டு வைத்தியங்களை பதிவில் பார்க்கலாம்.
கரும்புள்ளி
சிலருக்கு முகத்தில் நிறைய கரும்புள்ளிகள் இருக்கும். குறிப்பாக மூக்கின் நுனியில். இது அருவருப்பாகத் தெரிவது மட்டுமல்லாமல், முகத்தின் அழகையும் கெடுக்கும்.
பல பெண்கள் இந்த கரும்புள்ளிகளை சுத்தம் செய்ய அழகு நிலையங்களுக்குச் செல்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் அழகு நிலையத்திற்குச் செல்வது சிலருக்கு கடினமாக இருக்கும்.
இதற்காக பணத்தையும் அதிகமாக செலவு செய்ய வேண்டி வரும். ஆனால் இயற்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு இருக்கும். பெரும்பாலானோர் இதை அறிவதில்லை.
அந்த வகையில் விடாப்பிடியான கரும்புள்ளிகளை இயற்கையான முறையில் செலவில்லாமல் நீக்கும் வழிமுறை இரண்டை தெரிந்துகொள்ளலாம்.

வழிமுறை
பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் - ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை போட்டு அதை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் நன்கு தடவவும். உங்கள் தோலை மெதுவாக தேய்த்து 3-5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல பெறுபேற்றை நீங்கள் பார்க்கலாம்.

தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவை - கரும்புள்ளிக்கு இந்த கலவை பயனுள்ளதாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடியை போட்டு நன்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் கழுவவும். இது உண்மையிலேயே மிகவும் நல்ல பெறுபேற்றை கொடுக்கும்.

இந்த வீட்டு வைத்தியங்களை முறையாக செய்தால் மூன்று அல்லது நான்கு வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு விரைவில் கிடைக்கலாம்.
இயற்கையில் இருக்கும் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து அதில் நமக்கு ஏற்ற தீவை பெற்றுக்கொள்வத மிகவும் நல்லது. இது தவிர நம்மை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |