நவக்கிரக தோஷம் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!
வாழ்க்கையில் தோல்வியை மட்டுமே ருசிப்பவர்கள் அதைக்கண்டு துவண்டு விடாமல் இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு மாற வேண்டும்.
இல்லாதவர்களுக்கும் பசியோடு இருப்பவர்களுக்கும் தானம் செய்தால் உங்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறையும். சனிக்கிழமையில் அன்னதானம் செய்வதன் மூலம் நவ கிரக தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
நவகிரக தோஷம் நீங்க சனிக்கிழமைகளில் நவதானியத்தால் செய்யப்பட்ட தோசையை சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுங்கள்.
நவதானிய தோசையை சனிக்கிழமை செய்து சாப்பிட்டால் நவ கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாம் உண்ணும் உணவு, தானமாக கொடுக்கும் பொருட்களினாலும் தோஷங்கள் நீங்கும். எந்த தோஷம் இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்ன தானமாக கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.
சூரிய தோஷம்
சூரியன் ஒரு நபருக்கு ஜாதகத்தில் சூரிய பலமற்ற அல்லது சாதமற்ற இடத்தில் இருந்தால், சூரியனை தினமும் வணங்குதலும், சூரிய நமஸ்காரம் செய்தலும் வேண்டும்.
சூரியன் தோஷத்தில் இருந்து விடுபட சூரிய காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். இது சூரியனால் ஏற்படக்கூடிய கெடுபலன்களிலிருண்டு தப்பிக்க வழி கொடுக்கும். சூரிய பகவானுக்கு உரியது கோதுமை.
ஞாயிறு காலை 6 மணிமுதல் 7 மணிக்குள் கோதுமை தானம் செய்யலாம். கோதுமையால் தயாரித்த சுண்டலோ அல்லது உணவையோ படைத்து தானமாக கொடுத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். சிவ வழிபாடு சூரியனை சுப வலுப்பெறச் செய்யும்.
சந்திர தோஷம்
உங்கள் ஜாதகத்தில் சந்திரன் குறைபாடு இருந்தால், மன நல பாதிப்புகள் குழப்பங்கள் ஏற்படும். சந்திர தோஷம் விலக சந்திர காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். திங்கட்கிழமைகளில் (சோமவார) விரதம் இருந்து பார்வதி, பரமேஸ்வரரை வணங்க வேண்டும்.
திங்கட்கிழமைகளில் அன்னதானம் தர சந்திர தோஷங்கள் நீங்கும். ஒருமுறை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வரலாம். நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும். வெள்ளி பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். வளர்பிறையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.
செவ்வாய் தோஷம்
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் சாதகமற்ற நிலையில் இருந்தால் செவ்வாய் தோஷம் நீங்க சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து முருகனை வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை.
இதனை படைத்து வணங்கினால், விபத்து, காயங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். திருமண தடை நீங்கும். சொத்து சேரும். செவ்வாய்க்கிழமை சுந்தர காண்டத்தைப் படிப்பதால் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் நீங்கும்.
புதன் தோஷம்
உங்கள் ஜாதகத்தில் புதன் குறைபாடு இருந்தால் உளவியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம். புதனுக்கு உரிய பச்சை பயிறு தானியத்தை வைத்து வணங்கினால்,வியாபார தடை,கல்வி தடை நீங்கும்.
விநாயகரை வணங்குவதன் மூலமும், பசுவுக்குக் கீரை கொடுப்பதன் புதன் தோஷம் நீங்கும். வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று அவல், பொரி பாயாசம் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் மதுரைமீனாட்சியம்மன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும் மரகதப் பச்சை மோதிரம் அணிய வேண்டும்.
குரு தோஷம்
ஜாதகத்தில் குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தால் நவகிரகங்களில் குருவை வணங்க வேண்டும். இத்தோஷம் விலக குரு காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். முருகனை வழிபட வேண்டும்.
வசதியற்றவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் கொடுக்கலாம். யானைக்கு கரும்பை உணவாக தர வேண்டும். குரு பகவானுக்கு உரியது கடலை. கடலையை படைத்து வணங்கினால், மங்கள சுபாரியங்கள் சுலபமாக நடக்கும்.
திருமணம் நடைபெறும், புத்திரபாக்கியம் கிடைக்கும். சுக்கிரன் தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தால் வெள்ளை நிற பொருட்களை தானமாக வழங்க வேண்டும்.
பச்சரியை தானம் செய்வது மிகவும் நல்லது. தினமும் லட்சுமி தேவியை வணங்க வேண்டும். சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. மொச்சையை படைத்து வணங்கினால், கலைகளில் வித்தகராக திகழலாம். சுக்கிர பகவானால் ஏற்படக்கூடிய பிரச்னைகளை நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சனி தோஷம்
ஜாதகத்தில் சனி சாதகமற்ற இடத்தில் இருந்தால், நீங்கள் எல்லாவற்றையும் இழப்பீர்கள். சனி பகவானுக்குரியது எள். சனிக்கிழமை எள்ளை படைத்து வணங்கினால், எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும். கஷ்டங்கள் நீங்கும். பூர்வீக சொத்து கிடைக்கும்.
நோய் தீரும். ஆயுள் அதிகமாகும். சனிக்கிழமைகளில் சனிபகவானின் பாதங்களைப் பார்த்து விளக்கை ஏற்றி வைக்கவும். அனுமன் சாலிசாவையும் பாடி வர சனி பகவானால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் நீங்கும்.
ராகு தோஷம்
கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்யலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். ராகு தோஷம் நீங்கவும் ராகு தோஷத்தில் இருந்து தப்பிக்கவும் சில வழிகள் உள்ளன. ராகு பகவானுக்கு உரியது உளுந்து.
உளுந்து படைத்து வணங்கினால், நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும். திடீர் பணக்காரனாக்கும் தன்மை ராகு பகவானுக்கு உண்டு.
சனிக்கிழமை காலை 6.15 முதல் 6.45 மணிக்கு 5 அகல் தீபத்தை வீட்டு பூஜை அறையில் ஏற்றி வையுங்கள். தினமும் துர்க்கை காயத்ரியைச் சொல்லுங்கள் பாதிப்புகள் நீங்கும்.
கேது தோஷம்
கேது பகவானுக்குரியது கொள்ளு. கொள்ளு படைத்து வணங்கினால், நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும். விநாயக பெருமான் கேது கிரக பாதிப்புகளை நீக்க கூடியவர்.
சனிகிழமைகளில் விநாயக பெருமானை வழிபட்டு வரலாம். ஆலமரம் கேதுவின் அம்சம் .எனவே ஆலமரத்தை வழிபட வேண்டும். துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் அளிப்பதும் கேது தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.
குல தெய்வத்தை அடிக்கடி மனதார வேண்டுக்கொள்ளுங்கள் எத்தகைய தோஷமும் எளிதில் நீங்கும்.