ஃபிரிட்ஜ் வெடித்து காவல் ஆய்வாளர் உடல் கருகி பலி! வெடிப்பதற்கு காரணம் என்ன? அலட்சியம் வேண்டாம்
இந்தியா மாநிலம் தமிழகத்தில் கோவையில் பிரிட்ஜ் வெடித்து காவல் ஆய்வாளர் மற்றும் அவருக்கு உதவி செய்ய வந்த பெண்ணும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென வெடித்த ப்ரிட்ஜ்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாத் (40). சென்னை காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் இவரின் மனைவி அண்மையில் உயிரிழந்துள்ளார்.
பின்பு இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு வந்த இவர், விடுமுறை நாட்களில் தனது வீட்டில் தங்கி வந்துள்ளார். அப்பொழுது கீழே வாடகைக்கு குடியிருக்கும் சாந்தி சபரிநாத்தின் வீட்டிற்கு சமைக்க வந்துள்ளார்.
அப்பொழுது திடீரென பலத்த சத்தம் கேட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் மேலே சென்று பார்த்த போது சாந்தியும், சபரிநாத்தும் தீயில் கருகியுள்ளனர்.
உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் சாந்தியும், சபரியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொலிசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு காரணம் வீட்டில் இருந்த ப்ரிட்ஜ் வெடித்திருப்பதே என்று தெரியவந்துள்ளது.
ப்ரிட்ஜ் வெடிக்க காரணம் என்ன?
ஃபிரிட்ஜ் பராமரிப்பில் கண்டென்சர் காயிலை அடிக்கடி சுத்தம் செய்வதுடன், இவற்றில் தூசி படிந்திருந்தால் செயல்பாடு குறையும். அளவுக்கு அதிகமாக கண்டென்சர் சூடாக இருப்பதாக உணர்ந்தால் உடனே மெக்கானிக் வரவழைத்து பார்க்கவும்.
கண்டென்சர் காயில் வெளியிடும் வாயு தடையில்லாமல் வெளியேற வேண்டுமென்றால் ஃபிரிட்ஜை சுவரை ஒட்டி வைக்கக் கூடாது. சுவற்றிலிருந்து சற்று இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
3 மாதங்களுக்கு ஒரு முறை ஃபிரிட்ஜ் பிளக் பாய்ண்டை பரிசோதனை செய்வது அவசியம்.
உங்கள் வீட்டில் மின்சார பிரச்சினையிலிருந்து தற்காத்துக் கொள்ள ஃபிரிட்ஜ் அருகில் இரப்பர் மேட் போடுவது நல்லது. ஃபிரிட்ஜை திறக்கும்போது அந்த இரப்பர் மேட் மீது நின்றுகொண்டு திறந்தால் மின்சாரம் பாய்வதை தடுக்கலாம்.
ஃபிரிட்ஜ் பின்புறம் உள்ள பாக்ஸில் வெளியேறும் தண்ணீரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். நீர் தானாக ஆவியாகிவிடும்... இருப்பினும் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும்.
மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை பழுது பார்ப்பது அவசியமாகும்.