மழைக்காலத்தில் ப்ரிட்ஜில் உப்பு! ஏன் வைக்க வேண்டும் தெரியுமா?
பருவமழைக்காலம் தொடங்கிவிட்டாலே சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாக நேரிடும், இதற்கு முன்பாகவே நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.
வீட்டில் மின்சாதனப் பொருட்களை சரிபார்த்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களின் கையிருப்பு என சொல்லிக்கொண்டெ போகலாம்.
மழைக்காலத்தில் உள்ள ஈரப்பதம் உங்கள் வீட்டின் குளிர்சாதனப்பெட்டியையும் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இதற்கான தீர்வைத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
ஆம், ஒரு கிண்ணத்தில் கல் உப்பை போட்டு குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து விடுங்கள், இதை ஏன் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
உப்பானது, காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும் தன்மை கொண்டது, குளிர்சாதனப்பெட்டியில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும் போது உணவுகள் விரைவில் கெட்டியாகிவிடும், உப்பானது ஈரப்பதத்தை உறிஞ்சிவிடுவதால் குளிர்சாதனப்பெட்டி அதிகம் கூலாக இருப்பது தடுக்கப்படுகிறது, இதனால் உணவுகள் நீண்டநேரம் ப்ரஷ்ஷாக இருக்கும்.
ஈரப்பதம் அதிகம் இருந்தால் பக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும், கெட்ட வாடையும் இருக்கும், மிதமான பக்டீரியாக எதிர்ப்பு பண்புகளை கொண்ட உப்பானது, பக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கிறது, கெட்ட வாடையையும் போக்குகிறது.
மிக முக்கியமாக பூஞ்சைகள் உருவாவதை உப்பு தடுக்கிறது, இதனால் காய்கறிகள் ப்ரஷ்ஷாக இருக்கும்.
பயன்படுத்துவது எப்படி?
ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை போட்டு குளிர்சாதனப்பெட்டியின் மூலையில் வைத்து விடுங்கள், 7 அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை ஈரமாகவோ அல்லது கடினமாகவோ இருக்கும்பட்சத்தில் மாற்றிவிடவும்.
கூடுதல் வாசனைக்காக அதில் கிராம்பு அல்லது காபி கொட்டைகளை சேர்க்கலாம். ஈரப்பதம் அதிகம் இருந்தால் அலமாரிகளிலும் இதை செய்து வரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |