டூத் ப்ரஷை பாத்ரூமில் வச்சிருக்கீங்களா..? நோய்கள் வருமாம்
காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் வேலையே பல் துலக்குவது தான், வாயை சுத்தமாக வைக்க பல் துலக்குகிறோம், ஆனால் அதுவே பல்வேறு கிருமித்தொற்றுகளுக்கு காரணமாகலாம் என தெரியுமா?
ஆம் நீங்கள் பயன்படுத்தும் டூத் ப்ரஷில் பல கிருமிகள் ஒளிந்திருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் பயன்படுத்தும் டூத் ப்ரஷை கழிவறையிலேயே வைத்துவிடுவீர்களா? அதனால் வரும் ஆபத்துகளை யோசித்ததுண்டா?
இந்த கேள்விகளுக்கான பதில்களை தெரிந்து கொள்வோம்.
பலரும் செய்யும் தவறு கழிவறைக்கு அருகிலேயே டூத் ப்ரஷை வைத்துவிடுவது தான். நாம் ஃபிளஷ் செய்யும் போது, மிகவும் ஆபத்து வாய்ந்த பாக்டீரியாக்கள் அங்குள்ள காற்றில் பரவி, அருகில் உள்ள பொருள்கள் மீது படர வாய்ப்புள்ளது.
அந்த கிருமிகள் பல்கிப்பெருகி நோயை பரப்புகின்றன, அதை நாம் பயன்படுத்தும்போது கிருமித் தொற்றுக்கு ஆளாகிறோம்.
இதுமட்டுமா ப்ரஷை பயன்படுத்திவிட்டு, அப்படியே ஈரமாக விட்டுவிடுகிறோம், பலர் ப்ரஷின் மேல்பகுதியை மூடிவிடுகின்றனர்.
இதுவும் கிருமிகள் வளர்வதற்கு ஏற்றதே, ப்ரஷை பயன்படுத்தும் முன்னர் கழுவ வேண்டும். இதேபோல் பயன்படுத்திய பின்னர் காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும், குறிப்பாக கழிவறைக்கு வெளியே வைத்து விடுங்கள்.
மிக முக்கியமாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் பயன்படுத்தும் ப்ரஷை மாற்றிக்கொள்ள வேண்டும், அதன் துளைகள் மற்றும் மென்மையான நூல்களில் பக்டீரியாக்கள், பூஞ்சைகள் வளர வாய்ப்பு அதிகம் என்பதால்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |