வல்லவன் படநடிகை ரீமா சென்னை ஞாபகம் இருக்கா? இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த ரீமா சென்னின் மகனிற்கு பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ரீமா சென்னிற்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
நடிகை ரீமா சென்
செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ரீமாசென். அதற்கு முன்னர் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் தான் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதற்குப் பிறகு தான் கௌதம்மேனன் திரைப்படமான மின்னலே திரைப்படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து பிரபல்யமானார்.
இந்தப்படந்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து விஜய், விக்ரம், விஷால், சிம்பு, அர்ஜுன் போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்து கொஞ்ச காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபல்யமானார்.

அதன்பின் 2012ஆம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார். பின்னர் நடிப்பிற்கு தொழிலதிபர் ஷிவ் கரண்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்தத்தம்பதியினருக்கு 2013 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ருத்ரவீர் சிங் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்நிலையில் தனது மகனுக்கு நேற்றுடன் 10வயதாகிய நிலையில் மகனின் பிறந்த நாளை வெகுவிமர்சையாக கொண்டாடியிருக்கிறார்.

அந்தப்புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார், இந்தப்புகைப்படங்கள் தற்போது பெரும் வைரலாகி வருகின்றது.