நடிகை ரீமா சென் மகனா இது? வெளியிட்ட புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் விஜய், மாதவன், விக்ரம், விஷால், கார்த்தி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரீமாசென்.
இவர், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். குடும்பத்துடன் நேரம் செலவழித்து வரும் இவர், அவ்வப்போது படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இதனிடையே, இவருக்கு 8 வயதில் தற்போது ஒரு மகனும் உள்ளான். அவர் பெயர் ருத்ரவீர் சிங். தன்னுடைய மகனின் புகைப்படத்தை ரீமா சென் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், அழகான கண்கள் கொண்டவர் என் மகன் எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை கண்ட பலர் ரீமா சென்னின் மகனா இது? இந்த அளவுக்கு வளர்ந்து விட்டாரா என புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.