இலங்கை றீச்ஷா பண்ணையில் அமோக விளைச்சல் தரும் டிராகன் பழம்
பெரும்பாலானவர்கள் அன்றாட வாழ்வில் அரிதாகவே பயன்படுத்தும் பழங்களின் பட்டியலில் டிராகன் பழம் இடம்பித்தாலும் கூட இது கொடுக்கும் நன்மைகள் ஏராளம். ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி இந்த பழம் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமான பழமும் கூட.
இதில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

டிராகன் பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும் என முயற்சித்து வருபவர்கள் இதை சிற்றுண்டியாக கூட எடுத்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு பசியை போக்கி வயிறு நிரம்பிய முழுமையான உணர்வை கொடுக்கும். தொப்பை பிரச்சினைக்கும் சிறந்த தெரிவாக அமையும்.
இதில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் கரோட்டின் செரவாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க அதிகரிப்பதுடன், செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.

டிராகன் பழத்தை தினசரி உயவில் சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.
மேலும் இதில் உள்ள மெக்னீசியம் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதுடன் மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகின்றது.

அவ்வாறு அநேகமான நோய்களுக்கு அருமருந்தாக இருக்கும் பழங்களில் ஒன்றான டிராகன் பழத்தை (Dragon Fruit) இலங்கையில் றீச்ஷா பண்ணை பயிரிட்டுள்ளது.
அந்தவகையில்,டிராகன் பழ பயிர்செய்தை தொடர்பான விரிவான விளக்கத்தை இந்த காணொளியின் வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |