சர்க்கரை அளவு சரியா இருக்கணுமா? நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு
காலை நேரத்தில் ராகி கூழ் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தமிழ் மக்களின் பாரம்பரியமான உணவுகளில் ஒன்று தான் ராகி. நமது முன்னோர்கள் ராகி, கேழ்வரகு இவற்றினை தான் பிரதான உணவாக வைத்திருந்தனர்.
ராகியின் நன்மைகள்
இவை உடல் ஆரோக்கியத்தையும், வலிமையையும் கொடுக்கும் நிலையில், இதில் ஏராளமான சத்துக்களும் உள்ளது.
குறிப்பாக ராகியில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் இவை எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியை அளிக்கின்றது.
வெப்பம் அதிகமாக உள்ள காலங்களில் ராகி கூழ் குடித்து வந்தால் உடல் வெப்பம் குறைவதுடன், குளிர்ச்சியாகவும் காணப்படும்.
மேலும் இதில் புரதச்சத்துக்களும் அதிகமாக உள்ளதால் இவை உடம்பிற்கு வலிமையை கொடுக்கின்றது. இதிலுள்ள அமினோ அமிலங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவுகின்றது.
நீரிழிவு நோயாளிகளுக்கு இவை சிறந்த உணவாகும். ஏனெனில் இவை ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் அருமையான உணவாகும்.
ராகி சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைந்து இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கின்றது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் ராகி உணவை எடுத்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |