இடுப்பை சுற்றி கொழுப்பா? பெண்களே இதை மறக்காமல் செய்யுங்கள்
திருமணமாகி குழந்தை பெற்ற பின்னர் பெண்களில் பலருக்கும் உடல் எடையை அதிகரித்து விடுகிறது.
அன்றாடம் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, துரித உணவுகள், உடற்பயிற்சி இல்லாதது இவை எல்லாமே உடல் எடையை அதிகரிக்க முக்கிய காரணமாகிறது.
சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்.
# காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.
# வயிறு நிறைய உணவு சாப்பிடாமல், உணவை குறைவாக சாப்பிட்டு பழச்சாறு அருந்தலாம்.
# தினமும் இரவு தூங்க செல்லும் முன்னர் சோம்புவை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரித்து இடுப்பு சதையை (hip) குறைக்க உதவுகிறது.
# வெந்நீரை அடிக்கடி அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.
# மாதம் இருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் சாப்பிட வேண்டும். இது உடலில் இருக்கும் வாயுக்களையும், கழிவுகளையும் நீக்குகிறது.
# இடுப்புப் பகுதியை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது ஜாக்கிங். தினமும் அதிகாலை எழுந்து குறைந்தது அரை மணி நேரமாவது ஜாக்கிங் செல்வதை வழக்கமாக்குங்கள்.
# இடுப்பினை சுற்றியிருக்கும் கொழுப்பு குறைக்க வேண்டுமென்றால் இடுப்பிற்கு அதிக உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டும். இடுப்பிற்கும் வயிற்றிற்கும் அதிக அழுத்தம் தரக்கூடிய வகையில் பயிற்சிகளை செய்தால் நல்ல பலனை பெறலாம்.