பிரிட்ஜை ஆப் செய்து பயன்படுத்துவதால் மின் கட்டணம் குறையுமா? பலரும் அறியாத பதில்
குளிர்சாதன பெட்டியை எவ்வாறு பயன்படுத்தினால் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குளிர்சாதன பெட்டி
இன்று கடின உடலுழைப்பு என்பது சுலபமாகிவிட்டது. காரணம் அனைத்தும் இயந்திரமாயமாகியுள்ளதுடன், தொழில்நுட்பமும் அசுற வேகத்தில் வளர்ந்துள்ளது.
அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களில் ஒன்று தான் குளிர்சாதன பெட்டி. காய்கறிகள், பழங்கள், உணவுகள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு இன்று பெரும்பாலான வீடுகளில் இது பயன்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் குளிர்சாதனப்பெட்டியை இடையில் அணைத்து வைத்தால் மின் கட்டணம் குறையுமா என்ற கேள்வி அதிகமாகவே எழுந்துள்ளது.
ஃபிரிட்ஜை இடையில் அணைக்க வேண்டுமா?
குளிர்சாதன பெட்டிகள் பொதுவாக 24 மணி நேரமும் இயங்க கூடியதாக தான் தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருந்தாலும் குளிர்சாதன பெட்டிக்கு ஒன்றும் ஆகாது.
குளிர் சாதனப் பெட்டியை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் அணைத்து வைத்தால் அதன் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுவதுடன், இதனால் உணவும் கெட்டுப்போய்விடும்.
எனவே குளிர்சாதன பெட்டி 24 மணி நேரமும் இயங்குவதுதான் சரியானதாக இருக்கும். அதுமட்டுமன்றி 1 அல்லது 2 மணிநேரம் குளிர்சாதனைப் பெட்டியை அணைத்து வைத்தால் அது பெரிய மாற்றத்தினை கொடுக்காதாம்.
அதாவது குளிர்சாதனப்பெட்டியை அணைத்தவுடன், உள்ளே வெப்பநிலை உயரத் தொடங்குகின்றது. பின்பு சிறிது நேரம் கழித்து நீங்கள் ஆன் செய்தால், கம்ப்ரசர் குளிர்சாதனப்பெட்டியை அதே வெப்பநிலையில் மீண்டும் குளிர்விக்க அதிக நேரம் எடுக்கும், மேலும் அதைச் செய்வதற்கு இன்னும் அதிக மின்சாரம் செலவழிக்கும்.
நவீன குளிர்சாதனப்பெட்டியானது, சரியான வெப்பநிலையை அடைந்ததும் கம்ப்ரசர் தானாகவே அணைந்துவிடுவதுடன், குளிர் சாதனப்பெட்டியை குளிர்ச்சியாகவும், மின்சாரத்தை சேமிக்கவும் இது உதவுகின்றது.
எனவே நீங்கள் வெளியூர் பயணமாக எங்காவது செல்ல விரும்பினால், குளிர்சாதன பெட்டியில் இருக்கும் பொருட்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு அணைத்து வையுங்கள்.
மாறாக 1 அல்லது 2 மணி நேரம் மட்டும் அணைத்து வைப்பது சிறந்த தேர்வாக இருக்காது என்பதையும் தெரிந்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |