குண்டான தொப்பையைத் இல்லாமல் செய்து தட்டையான வயிற்றைப் பெற கொள்ளு சூப்: எப்படி செய்வது?
பொதுவாகவே இப்போதுள்ளவர்களுக்கு உடல் எடையைக் குறைப்பது பெரும் போராட்டமாகவே இருக்கும்.
இவ்வாறு அதிகரித்துக் கொண்டு போகும் தொப்பையால் பலரும் பல கேலி கிண்டல்களையும் சந்தித்து வருவார்கள். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடை குறைந்த பாடாக இருக்காது.
உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள். சிலருக்கு உடல் எடையை குறைக்க நேரம் இல்லாமல் இருக்கும். இப்படியானவர்கள் தினமும் கொள்ளு ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும், கொழுப்பும் கரையும்.
அந்த வகையில் உங்கள் தொப்பையைக் குறைக்கும் கொள்ளு ஜூஸ் எப்படி செய்வது தெரியுமா?
தேவையான பொருட்கள்
- கொள்ளு - 100 கிராம்
- பூண்டு - 1 பல்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - இரண்டு சிட்டிகை
செய்முறை
முதலில் சூப் செய்ய எடுத்துக்கொண்ட கொள்ளினை, எண்ணெய் சேர்க்காமல் ஒரு வாணலியில் சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர், இந்த கொள்ளினை தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, நன்கு ஆற விட வேண்டும். கொள்ளு ஆறியதும், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தற்போது சூப் தயார் செய்ய, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சுமார் 300மிலி அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
முதல் கொதி வந்ததும் அடைப்பை சிம்மில் வைத்துக்கொள்ளுங்கள்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் இதில், அரைத்து எடுத்து வைத்துள்ள கொள்ளு பொடியில் இருந்து 2 ஸ்பூன், சீரகம் மற்றும் உப்பு சேர்த்துக்கொதிக்க வைக்கவும். பூண்டு பல்லினை இடித்து சேர்த்துக்கொள்ளவும்.
இந்த சேர்மத்தை 7 - 10 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைத்த பின்னர், அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்.
பின்னர், வடிகட்டி ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ள கொள்ளு சூப் தயார்.
பாவனை முறை
இந்தக் கொள்ளுப்பொடி சுமார் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
தினமும் காலை டீ, காபிக்கு பதிலாக இந்த கொள்ளு சூப்பினை தொடர்ந்து 30 நாட்களுக்கு பருகி வர உடல் எடையில் மாற்றம் தெரியும்.
உடல் சூட்டை தணிக்கும் கொள்ளினை, ரசமாகவும் சமைத்து பருகுவது உங்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.