காலையில் டீ, காபி குடிக்காதீங்க! நன்மைகளை அள்ளித்தரும் இந்த ஒரு ஜுஸ் போதும்
காலை எழுந்ததும் நம்மில் பெரும்பாலான நபர்கள் டீ, காபி குடிப்பதை தான் வழக்கமாக வைத்திருப்பார்கள். இவ்வாறு நாளின் ஆரம்பம் இருந்தால் தான் அவர்களுக்கு நன்றாகவே இருக்கும்.
ஆனால் இந்த காபி டீ குடிக்கும் பழக்கம் மிகவும் ஆபத்தானது. இவ்வாறு வெறும்வயிற்றில் இதனைக் குடீக்காமல், சில சத்துள்ள ஜுஸை காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
சுரைக்காய் சாறு
தண்ணீர் சத்து அதிகமாக இருக்கும் சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் பி, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து போன்றவை அதிகளவில் உள்ளதுடன் செரிமான சக்தியையும் அதிகரிக்கின்றது.
ஆம் காலை வெறும்வயிற்றில் இதனை ஜுஸாக குடித்தால் அதிகமப்படியான அமிலங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றது.
தேவையான பொருட்கள்
நறுக்கப்பட்ட சுரைக்காய் - 1 கிண்ணம்
செலரி - 1 கிண்ணம்
வெள்ளரிக்காய் - 1 கிண்ணம்
எலுமிச்சை சாறு - அரை பழம்
புதினா இலைகள் - சிறிதளவு
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சுரைக்காய் சாற்றின் நன்மைகள்
மேலே கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அறைத்து வடிகட்டி காலையில் பருக வேண்டும்.
தினந்தோறும் சுரைக்காய் சாற்றை குடிப்பதனால் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதுடன், மன அழுத்தத்தினையும் போக்குவதுடன், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
உடல் எடையைக் குறைக்க உதவும் சுரைக்காய், கல்லீரல் அழற்சி பிரச்சினையையும் சரிசெய்கின்றது.