ரெட் வெல்வெட் பிரவுனி ஈஸியாக செய்வது எப்படி? இன்றே செய்து பாருங்க
நம்மிள் பலர் கேக் பிரியர்களாகவே இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக ஆண்கள் இனிப்பு வகைகளை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு கேக், பிரவுனி என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கும் பிடிக்கும், ஆனால் கொடுக்கும் அளவுடன் கொடுப்பது நல்லது.
எவ்வளவு நாட்கள் தான் வீட்டிலுள்ளவர்களுக்கு வெளியில் இருந்து கேக், பிரவுனி வாங்கி கொடுப்பீர்கள்.
ஒரு தடவையாவது வீட்டிலுள்ள பொருட்களை பயன்படுத்தி,ஆரோக்கியமான முறையில் உங்களுடைய கை பக்குவத்தில் பிரவுனி செய்து கொடுங்கள்.
அந்த வகையில், வீட்டிலுள்ளவர்களை தன்வசப்படுத்த ரெட் வெல்வெட் பிரவுனி, அட்டகாசமான சுவையில் செய்வது எப்படி என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- பட்டர் - 1 கப் அளவு
- சாக்லேட்- 1/3 கப்
- கொக்கோ பவுடர்- 3
- தேக்கரண்டி வினிகர்- 1
- தேக்கரண்டி முட்டை - 4
- சீனி- 1.5 கப்
- எசன்ஸ்- 1 தேக்கரண்டி
- பவுடர் சீன் -1.75 கப்
- கலரிங்- சிவப்பு
- கோதுமை மா- 1.75 கப்
- சாக்லேட் சிப்ஸ் 1.75 கப்
- சீஸ்- 250g
- sour cream- 2 கரண்டி
- வெள்ளை நிற சீனி - 1.25 கப்
- சோளம் மா- 1 கரண்டி
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
தயாரிப்பு முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில், கேக் செய்ய வைத்திருக்கும் பட்டரை போட்டு நன்றாக உருகச் செய்யவும்.
அதனுடன் சாக்லேட் துண்டுகளையும் போடவும். அதன் பின்னர் கோக்கோ பவுடர், வினிகர் போட்டு நன்றாக கலந்து விடவும்.

அடுத்து ஒரு அளவான பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் சீனி, வெண்ணிலா எசன்ஸ் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். அடித்த முட்டை கலவையுடன் பவுடர் செய்து வைத்திருக்கும் சீனியை கொட்டவும்.
எல்லாவற்றை ஒன்றாக கலந்த பின்னர் சிவப்பு நிற கலரிங் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
அந்த கலவையுடன் சாக்லேட் கலவையை கலந்து, நன்றாக கலந்து விடவும். அதனுடன் கோதுமை மா, சாக்லேட் சிப்ஸ் போட்டு மெதுவாக கலந்து விடவும்.
இதனை தொடர்ந்து வேறு ஒரு பவுலில், சீஸை போட்டு, sour cream, முட்டை, வெள்ளை நிற சீனி, சோளம் மா போட்டு நன்றாக பீட்டரில் அடிக்கவும்.
அதன் பிறகு, கலந்து வைத்திருக்கும் பிரவுனி கலவையை அவனில் உள்ள தட்டில் கொட்டி, தயார் நிலையில் உள்ள கிரீமை போட்டு, அதன் மேல் மீண்டும் சிவப்பு நிற பிரவுனி கலவையை கொட்டவும். அங்காங்கே தேவையிருந்தால் கிரீமை கொட்டி விடலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |