அசிங்கப்படுத்தும் தொப்பையை மின்னல் வேகத்தில் கரைக்கணுமா? காலையில் இந்த ரசம் ஒரு கப் குடிங்க!
பொதுவாகவே சிறுதானிய வகைகளில் அதிளவில் ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளதென்பது அனைவரும் அறிந்தது தான்.
கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு இளைத்தவனுக்கு எள்ளு கொடு என பலமுறை பெயர்வர்கள் சொல்லி கேட்டிருப்போம்.

இது விளையாட்டாக சொல்லப்பட்ட பழமொழி கிடையாது. அதில் அர்த்தம் நிறைந்ததுள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளு ஆற்றல் காட்டுகின்றது.
அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்த கொள்ளு நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் உதவுகின்றது இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.
ஏராளமான மருத்துவ குணங்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ள கொள்ளை கொண்டு அருமையாக சுவையில் காரசாரமான ரசம் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கொள்ளு - 1/2 கப்
தக்காளி - 2
தண்ணீர் - 1 1/2 கப் + தேவையான அளவு
புளி - எலுமிச்சை அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
அரைப்பதற்கு தேவையானவை
சீரகம் - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1/2 மேசைக்கரண்டி
கட்டி பெருங்காயம் - சிறிதளவு
பூண்டு 3 பல்

செய்முறை
முதலில் கொள்ளு பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து, தண்ணீரில் இரண்டு முறை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் நீரை ஊற்றி, நீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கழுவிய கொள்ளு பருப்பை சேர்த்து, அத்துடன் 2 தக்காளியை முழுமையாக சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் வரும் வலையில், வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.

விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.பின்னர் அத்துடன் வேக வைத்த தக்காளியையும் சேர்க்க வேண்டும். பின்னர் அந்த தண்ணீரில் 1 எலுமிச்சை அளவு புளியை சேர்த்து, 15 நிமிடம் வரைவில் ஊறவிட வேண்டும்.
பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பொடியாக நறுக்கிய 2 சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஊற வைத்துள்ள புளியையும் கைகளால் நன்றாக பிசைந்து வடிகட்டி, அந்த தண்ணீரை ஒரு பாத்திரத்துக்கு ஊற்றி, பின்னர் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் தூவி நன்றாக 5 நிமிடங்கள் வரையில், கொதிக்க விட வேண்டும்.
இதற்கு இடையில், இடி உரலில் மிளகு, சீரகம், கட்டிப் பெருங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்துக் வைத்துக்கொள்ள வேண்டும்.

ரசம் நன்றாக கொதிக்கத் ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மிளகு சீரகத்தை சேர்த்து கிளறி, சிறிது கொத்தமல்லியைத் தூவி, 1 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் உடல் கொழுப்பை கரைத்து அகற்றும் கொள்ளு ரசம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |