வயிற்றை சுற்றிலும் இருக்கும் கொழுப்பு காணாமல் போக வேண்டுமா? கடகடவென குறைக்க சூப்பர் டிப்ஸ்
இன்றைய காலத்தில் வயிற்றில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்றுவதற்கு பலரும் சிரமப்பட்டுவரும் நிலையில், இந்த பதிவில் மிகவும் சுலபமாக எவ்வாறு குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வயிறு தொப்பை
பொதுவாக நமது உடலில் நல்ல மற்றும் கெட்ட கொழுப்புகள் என இரண்டு காணப்படுகின்றது. கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்துவிட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும்.
இயற்கையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதால் நல்ல கொழுப்பின் சக்தி அதிகரித்து, நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை வெளியேற்ற முடியும்.
மனித உடலில் இருக்கும் உறுப்புக்களில் கொழுப்பு படிவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இவை நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

அடிவயிற்றில் காணப்படும் கொழுப்பினை கரைப்பதற்கு பலரும் பணத்தினை தண்ணியாக செலவு செய்து வருகின்றனர். அவ்வாறு பணம் இல்லாத நபர்கள் கடுமையான உடற்பயிற்சியினைக் கொண்டு தொப்பையை குறைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
வயிற்றில் தங்கியிருக்கும் கொழுப்புகளை நமது அன்றாட பழக்கவழக்கங்களை வைத்து மிகவும் சுலபமாகவும், வேகமாகவும் குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
வயிற்று கொழுப்பை கரைக்க சில டிப்ஸ்
நார்ச்சத்து உணவுகள்
வயிற்றுக் கொழுப்பினை சட்டென கரைப்பதற்கு நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் நார்ச்சத்து கட்டாயம் இருக்க வேண்டும். நார்ச்சத்து செரிமான அமைப்பினை மேம்படுத்தி உடல் எடை அதிகரிக்காமல் வைக்கின்றது. நார்ச்சத்து உடம்பில் கெட்ட கொழுப்பை கரைக்கும் என்பது ஆய்வில் கூட வெளிவந்துள்ளது.
அதாவது பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், ஓட்ஸ், பார்லி என எளிதில் கரையக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

கெட்ட கொழுப்பு உணவுகள்
ட்ரான்ஸ் கொழுப்புகள் என்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். ஏனெனில் சோயாபீன் எண்ணெய் போன்றவற்றில் உள்ள நிறைவுறா கொழுப்புகள் ஹைட்ரஜனை செலுத்துவதன் மூலம் ட்ரான்ஸ் கொழுப்பை உருவாக்குகின்றது.
கொழுப்பு வீக்கம், இதய நோய், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வயிறு கொழுப்பு அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகும். ஆதலால் கெட்ட கொழுப்புகள் கொண்ட உணவுகளான சாக்லேட், ஐஸ் கிரீம், பீட்சா, பர்கர், கேக், ப்ரெஞ்ச் பிரைஸ், பொரித்த சிக்கன் இவற்றினை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.

மது அருந்துதல்
சிறிய அளவில் மது எடுத்துக் கொள்வது ஆரோக்கியம் என்றாலும், அதிகப்படியான மது அருந்துதல் போன்றவை உடம்பில் அதிகப்படியான கொழுப்பை சேர்ப்பதுடன்,உடம்பிற்கு தீங்கை கொடுககின்றது.

புரதச்சத்து
அதிகமான புரதச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் வயிறு கொழுப்பு குறைவாகவே இருக்குமாம். ஆதலால் நமது உடம்பில் புரதச்சத்து இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அதாவது இவை பசியினைக் குறைத்து நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கின்றது.

மன அழுத்தம்
தொப்பை கொழுப்பு ஏற்படுவதற்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கின்றது. அட்ரீனல் சுரப்பிகள் கார்டி சோலை, மன அழுத்த ஹார்மோனை உற்பத்தி செய்ய தூண்டுவதன் மூலம் தொப்பை கொழுப்பு அதிகமாகின்றது. மேலும் அதிக கார்டிசோல் பசியை அதிகரிப்பதுடன், வயிறு கொழுப்பு சேமிப்பையும் அதிகரிக்குமாம்.

சர்க்கரையை தவிர்க்கவும்
சர்க்கரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனை அதிகமாக உட்கொள்ளும்போது நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கின்றது.
இவை இதய நோய் மற்றும் சர்க்கரை நோய், கொழுப்பு, கல்லீரல் நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கின்றது. மேலும் அதிகமான அளவில் சர்க்கரை சாப்பிடுபவர்கள் வயிற்று கொழுப்பும் அதிகரிக்கின்றது.
அதாவது சுத்திரிக்கப்பட்ட சர்க்கரை தொப்பை கொழுப்பை அதிகரிப்பதற்கு வழிவகுப்பதை உணர முடியும். ஆதலால் தரமான தேன், இயற்கை சர்க்கரைகளை பயன்படுத்தலாம். ஆனால் இதையும் அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஏரோபிக்(கார்டியோ) உடற்பயிற்சி
ஏரோபிக் உடற்பயிற்சி என்ற கார்டியோ உடற்பயிற்சியினை மேற்கொள்வது அவசியமாகும். ஏனெனில் இவை கலோரிகளை எரிக்கவும், வயிற்று கொழுப்பினைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
ஆனால் இந்த உடற்பயிற்சியினை அவரவர்களின் ஆரோக்கியத்தினை பொறுத்து அதிகமாக மேற்கொள்ளலாம். மாதவிடாய் நின்ற பெண்கள் வாரத்திற்கு 300 நிமிடங்கள் இதனை மேற்கொண்டு தனது வயிற்று கொழுப்பின் அளவை குறைத்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.

குறைவான கார்போஹைட்ரேட்
கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது கொழுப்பை குறைப்பதற்கு உதவி செய்கின்றது. கார்போஹைட்ரேட் உணவுகளை அதிக எடை கொண்டவர்கள், டைப் 2 நீரிழிவு, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் உள்ளவர்கள் குறைவாக எடுத்தால் தொப்பை கொழுப்பினை குறைப்பதற்கு வழிவகுக்கும்.
சுத்திரிகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வதை விட முழு தானியங்களாக எடுத்துக் கொள்ளலாம். இவை வயிற்று கொழுப்பை குறைப்பதுடன், வளர்சிதை மாற்றத்தினை மேம்படுத்தவும் செய்கின்றது.
எடை தூக்குதல்
பளு தூக்குதல் அல்லது வலிமை பயிற்சிகள் தசைகளை பாதுகாக்கவும், கல்லீரல் நோயினாலும், வயிறு கொழுப்பு உடையவர்களும் அதிக நன்மையினை அளிக்கின்றது.
ஏனெனில் பளு தூக்கும் பயிற்சியினை மேற்கொள்ளும் போது, வயிற்றில் உள்ள கொழுப்புகள் மட்டுமின்றி உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளும் குறைந்து, தசைகளை ஆரோக்கியமாக வைக்கின்றது.
ஆனால் இந்த பளு தூக்கும் பயிற்சியினை செய்வதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

image: pinterest
இனிப்பு பானம் மற்றும் பழச்சாறு
இன்று வரும் பெரும்பாலான குளிர்பானங்களில் கூடுதல் சர்க்கரை கலக்கப்படுகின்றது. இவை தொப்பை கொழுப்பினை நிச்சயம் அதிகரிக்கின்றது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் நீங்கள் உட்கொள்ளும் பானங்களில் இருக்கும் கலோரிகளை உங்களது குடல் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் போது இவை கொழுப்பாக மாறிவிடுகின்றது.
ஆதலால் சோடா, இனிப்பு தேநீர், சர்க்கரை கொண்ட ஆல்கஹால் இவற்றினை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

தூக்கம் அவசியம்
நாம் போதுமான தூக்கத்தினை மேற்கொள்ளாவிட்டால் உடல் பருமன் அதிகரிப்பதுடன், வயிறு கொழுப்பும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.
ஆய்வு ஒன்றில் இரவில் குறைவான தூக்கத்தினை தூங்குவர்களை விட சரியான அளவில் தூங்குபவர்களின் எடை சரியாக இருந்துள்ளது. ஆகையால் இரவில் 7 மணி நேரம் தரமான தூக்கத்தினை றே்கொள்ள வேண்டும்.
அதுவே இரவில் தூக்க கோளாறு, ஸ்லீப் அப்னியா என்ற பிரச்சனை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை சந்திக்கவும்.

கொழுப்பு நிறைந்த மீன்கள்
கொழுப்பு நிறைந்த மீன்களை கட்டாயம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மீனில் உயர்தர புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை நாள்பட்ட நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றது.
ஒமேகா 3 நல்ல கொழுப்பு என்பதால், இவை உள்ளுறுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வாக இருக்கின்றது.
வாரத்திற்கு 2-3 முறை கொழுப்பு நிறைந்த மீன்களான சால்மன், ஹெர்ரிங், மத்தி, கானாங்கெளுத்தி, நெத்திலி போன்ற மீன்களை எடுத்துக் கொண்டால், வயிறு கொழுப்பு கட்டாயமாக குறையும்.
இதுவே மீன் உட்கொள்ளாத சைவ பிரியர்கள், ஆல்கா போன்ற மூலங்களிலிருந்து பெறப்பட்ட தாவர அடிப்படையிலான ஒமேகா-3 சப்ளிமெண்டை எடுத்துக் கொள்ளலாம்.

Image: istock, getty
உண்ணாவிரதம்
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பது உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும், வயிறு கொழுப்பையும் குறைக்கின்றது. ஏனெனில் நாம் சாப்பிடாமல் இருக்கும் பொழுது ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது.
உண்ணாவிரதம் மேற்கொள்ளும் போது 8 மணி நேரம் அனைத்து உணவுகளையும சாப்பிட்டுவிட்டு பின்பு 16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கலாம்.
இவ்வாறு நீங்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் போது உடம்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் உடலில் சில பிரச்சனைகள் இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் உண்ணாவிரதத்தினை மேற்கொள்ளலாம்.

கிரீன் டீ
சாதாரண தேநீரை பருகுவதுடன் கிரீன் டீ உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன், வயிற்று கொழுப்பையும் குறைக்கின்றது.
உடற்பயிற்சியும் கிரீன் டீ-யை எடுத்துக் கொண்டால் கூடுதல் பலனை பெறலாம். கிரீன் டீ உடல் எடையைக் குறைப்பதற்கும், நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும் உதவுகின்றது.
உங்களது வாழ்க்கை முறை நிச்சயம் உங்களது உடல்எடையையும், வயிற்று கொழுப்பையும் அதிகரிக்கச் செய்யும் மனதில் வைத்துக்கொண்டு, ஆரோக்கியமான உணவுகளையும், செயல்களையும் மேற்கொள்வதுடன், வயிற்று கொழுப்பை குறைக்கும் சில யோகாவையும் மேற்கொள்ளலாம்.

Image: istock, getty
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |