உடல் எடை குறைக்கும் மீன்... கட்டாயம் வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங்க
கடல் மீன்களில் ஒன்றான சங்கரா மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்களின் பட்டியலில் முக்கியமான இடத்தில் மீன் இருக்கின்றது. மீனில் பல வகைகள் இருப்பதுடன், சற்று விலை குறைவான மீன் எதுவென்றால் சங்கரா மீன் ஆகும்.
இந்த மீனை வறுவல், குழம்பு என்று சாப்பிட்டு வரும் நிலையில், புரதச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், செலினியம், மக்னீசியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.
இந்த மீனை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சங்கரா மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த இந்த மீனை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படுகின்றது. இதய நோய், தமனித் தடிப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சிறந்த பலன் அளிக்கின்றது.
இந்த மீனில் உள்ள செலினியம் வெள்ளை அனுக்களின் உற்பத்தியினை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தினை வலுப்படுத்துகின்றது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது.

மேலும் இதிலுள்ள வைட்டமின் ஏ, செலினியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் மூளை ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது. மேலும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தினையும், நினைவாற்றலையும் அதிகரிக்கின்றது.
பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் எடையைக் குறைப்பதற்கு உதவுகின்றது. உடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து எடையைக் கட்டுப்படுத்துகின்றது. பொட்டாசியம் குறைவாக இருந்தால் பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், எலும்புப்புரை மற்றும் சிறுநீரக கற்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

சங்கரா மீன்கள் தைராய்டு ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதுடன், எலும்புகள் வலுவடையவும் செய்கின்றது. எலும்பு தாது அடர்த்தியினை வலுப்படுத்தவும் செய்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |