தீபாவளி ஸ்பெஷல் பலகாரம்: மிகவும் மென்மையான அதிரசம்
தீபாவளி பண்டிகையில் செய்யும் இனிப்பு வகைகளில் ஒன்றான அதிரசயம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே நமது நினைவிற்கு வருவது புத்தாடை, பட்டாசு, பலகாரம் இவைகள் தான். அதிலும் பலகாரங்களில் இனிப்பு வகையில் முதன்மையாக இருப்பது அதிரசம் ஆகும்.
அதிரசம் செய்வது சற்று கஷ்டமாக காரியமாகவே பார்க்கப்படுகின்றது. ஏனெனில் எண்ணெய்யில் பிரிந்து போவது, மென்மையாக இல்லாமல் கடினமாக இருப்பது என்று சவாலை சந்திக்க நேரிடும்.
சரியான பதத்தில் எண்ணெய்யில் பிரிந்து செல்லாமல் மென்மையாகவும், சுவையாகவும் அதிரசம் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி: 1 கிலோ
வெல்லம் (பாகு வெல்லம்): 3/4 கிலோ (750 கிராம்)
சுக்குத் தூள்: 1 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள்: 1 தேக்கரண்டி
எள் (வெள்ளை அல்லது கருப்பு): 1-2 தேக்கரண்டி
நெய்: 1-2 மேஜைக்கரண்டி
சமையல் எண்ணெய்
தண்ணீர்

செய்முறை
முதலில் மாவு பச்சரிசியை நன்றாக கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் உற வைத்து, பின்பு வடிகட்டி சுத்தமான துணியில் பரப்பி உலர்த்தவும்.
அதாவது ஈரப்பதம் இருக்க வேண்டும். ஆனால் கையில் ஈரம் ஒட்டக்கூடாத அளவிற்கு இருக்க வேண்டும். பின்பு ரைஸ்மில் சென்று அதிரசத்திற்கு என்று கூறி அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்த மாவை நன்றாக சலித்து, மாவு காய்ந்து போகாமல் நன்றாக அழுத்தி மூடி வைக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தினை சேர்த்து, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.

மிதமான தீயில் கொதிக்க வைத்து, இதனுடன் சுக்கு தூள், ஏலக்காய் தூள் மற்றும் எள் சேர்த்து கிளறவும். சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் சிறிதளது வெல்ல பாகை சில துளிகள் சேர்க்கவும்.
பாகு தண்ணீரில் கரையாமல், மென்மையாக உருண்மையாக வந்தால் தற்போது சரியான பதத்தில் பாகு இருப்பதாக அர்த்தம். இந்த பதத்திற்கு வந்ததும் அடுப்பினை அணைத்துவிட்டு 1 மேஜைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
இதனுடன் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கிளறிக் கொள்ளவும். மாவு வெல்லப்பாகுடன் சேர்த்து கெட்டியான பதத்திற்கு வர வேண்டும்.
மாவு ஆறியதும் ஒரு பாத்திரத்தில் மாற்றி, மேல்பகுதி காயாமல் இருப்பதற்கு சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் சேர்த்து ஒரு நாள் ஊற வைக்கவும்.

பின்பு ஊறவைத்த மாவை சிறிதளவு எடுத்து அதனை ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழையில் நெய் அல்லது எண்ணெய் தடவி அதிசமாக எண்ணெய்யில் போடவும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்தவுடன் அதிரசயத்தினை வெளியே எடுத்துவிடவும். தற்போது சுவையான, மென்மையான அதிரசம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |