ஒரே ராசியில் சேரும் 3 கிரகங்கள்... ராஜயோகத்தினை அடையும் 4 ராசிகள்
Trigrahi Raja Yoga: ஒரே ராசியில் 3 கிரகங்கள் சேர்ந்து திரிகிரக ராஜயோகம் ஏற்படுவதால் அதிர்ஷ்ட பலனைப் பெறும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
திரிகிரக ராஜயோகம்
பொதுவாக ஜோதிடத்தில் கிரகங்கள் தங்களது ராசி மற்றும் நட்சத்திரனை மாற்றிக் கொள்ளும் நிகழ்வு அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் சிம்ம ராசியில் சந்திரன், குரு மற்றும் கேது ஆகிய 3 கிரகங்கள் இணைவதால் திரிகிரக ராஜயோகம் உருவாக உள்ளது.
ஏற்கனவே சிம்ம ராசியில் குரு மற்றும் கேது கிரகங்கள் பயணித்து வரும் நிலையில், சந்திரனும் அதே ராசிக்குள் நுழைவதால் இந்த சேர்க்கையானது திரிகிரக ராஜயோகமாக மாறியுள்ளது. அந்த வகையில் எந்தெந்த ராசியினர் நன்மையை பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த காலக்கட்டமானது சாதகமாக இருப்பதுடன், மூன்றாவது வீட்டில் இந்த யோகம் உருவாவதால் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக தடைபட்டுள்ள வேலைகள் அனைத்தும் முடிவிற்கு வரும் வாய்ப்புள்ளதுடன், உடன் பிறந்தவர்களுடனான உறவும் மேம்படுமாம்.
சிறிய பயணங்கள் கூட எதிர்பாராத ஆதாயத்தினை தருமாம். பணியிடத்தில் உங்களது கருத்துக்கு மதிப்பும் அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியில் கிரகங்களின் சேர்க்கையானது முக்கிய காலமாக கருதப்படுகின்றது. தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், முந்தைய காலத்தை விட பொருளாதார நிலையும் மேம்படும்.
புதிய வாகனம் மற்றும் வீடு வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் திட்டம் நிறைவேறும் வாய்ப்புள்ளதுடன், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்குமாம்.

கடகம்
கடக ராசியினருக்கு இந்த கிரக சேர்க்கையினால் பணம் மற்றும் வருமானம் தொடர்பான விடயங்களில் சாதகமான பலனை பெறலாம். வருமானம் வருவதற்கான வழிகள் அதிகமாக கிடைப்பதுடன், பழைய கடன்களை அடைப்பதற்கான சூழ்நிலையும் அமையுமாம்.
பணத்தினை சேமிக்கும் எண்ணத்தை செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறுவதுடன், உங்களது பேச்சாற்றல் மற்றவர்களை கவருமாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த யோகமானது பத்தாவது வீட்டில் உருவாகும் என்று கூறப்படுவதுடன், வேலை மற்றும்தொழில் சார்ந்த விடயங்களில் முன்னேற்றம் நிகழும்.
பணியில் இருப்பவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தமும் கிடைக்குமாம்.
மேலதிகாரிகளிடத்தில் பாராட்டு, அங்கீகாரம் கிடைப்பதுடன், வேலை தேடுபவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |