இந்த திசையில் வைக்காதீங்க.. சிவப்பு குதிரை படத்தின் அற்புத பலன்கள் பாழாகும்
வீட்டில் சிவப்பு குதிரை படத்தை வைத்தால் என்ன நடக்கும் என்பதை பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
சிவப்பு குதிரை படம்
அநேகமான வீடுகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் வீட்டின் சுவரில் சிவப்பு குதிரை படத்தை மாட்டியிருப்பார்கள். ஆனால் இது உண்மையில் ஏன் மாட்டுவார்கள் என்ற விளக்கம் நம்மிள் பலருக்கும் தெரிந்திருக்காது.
ஆனால் அதற்கான பலன்கள் நிறைய உள்ளன. அதை பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். சிவப்பு நிற குதிரைகளை வீட்டில் மாட்டி வைப்பதால் ஆற்றல், வெற்றி, புகழ் மற்றும் செல்வத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன.
சிவப்பு நிற குதிரைகளின் புகைப்படத்தை வீட்டில் சரியான திசையில் வைத்தால் அந்த நபர் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறுகிறது.
அந்த வகையில், சிவப்பு குதிரை படத்தை வீட்டில் எந்த திசையில் மாட்ட வேண்டும். அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
தெற்கு திசையில் சிவப்பு நிற குதிரை
வாஸ்துபடி, நாம் வாழும் வீட்டில் தெற்கு திசையில் அக்னி மூலையில் தான் இதனை மாட்ட வேண்டும்.
இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் தெற்கு திசையில் சிவப்பு குதிரை படத்தை வைத்தால் அந்த திசை புகழ், செல்வாக்கு, ஆற்றல் கிடைக்கும். இதுபோன்று வீட்டிற்கு தேவையான நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.
எனவே இந்த திசையில் சிவப்பு குதிரை படம் வைப்பது உங்கள் வாழ்க்கைக்கு புகழ், செல்வாக்கை அதிகமாக பெற்று தரும். இது வாழ்க்கையில் சீரான வளர்ச்சி மற்றும் எல்லா தடைகளையும் கடக்க முடியும் என்பதை குறிக்கிறது.
எந்த திசையில் சிவப்பு குதிரை படம் வைக்கக் கூடாது?
மறந்தும் கூட சிவப்பு குதிரை படத்தை வட கிழக்கு திசையில் வைக்க கூடாது.
வடகிழக்கு திசை நீரை குறிக்கிறது. இது அமைதி, ஆன்மிக மனநிலைக்கான திசையாகும். இது ஆரோக்கியம், வளத்திற்கான திசையாகும். இதனால் இந்த சிவப்பு குதிரை படத்தை வைப்பவர்களுக்கு எதிர்மறையான விளைவுகள் அதிகமாக இருக்கும்.
தெற்கு திசையில் சிவப்பு குதிரை படத்தின் பலன்கள்
சிவப்பு நிறம் நேர்மறையான ஆற்றலை ஈர்க்கக் கூடியது. இதனால் இந்த குதிரையை வீட்டில் வைத்தால் மகிழ்ச்சியும் புத்துணர்வும் ஏற்படும்.
குதிரை வெற்றி மற்றும் வளர்ச்சிப் பாதையின் குறியீடாக இருக்கிறது. இதனால் சிவப்பு நிற குதிரைகள் புகைப்படத்தை தெற்கு திசையில் வைப்பது செய்யும் தொழிலில் வளர்ச்சியாகும்.
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட நினைப்பவர்களும் சிவப்பு நிற குதிரை படத்தை வாங்கி வீட்டில் வைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).