சரிகமப - வில் தேன் குரலால் அசத்திய போட்டியாளர்: நடுவர் கார்த்திக் ரியாக்ஷன் பாருங்க
இந்த வாரம் சரிகமப மண்வாசனை சுற்றில் போட்டியாளர் பவித்ரா மற்றும் ஸ்ரீகரி தேன் குரலில் பாடி அசத்தி உள்ளனர்.
சரிகமப
இந்த வாரம் சரிகமப வில் மண்வாசனை சுற்று இடம்பெற இருக்கின்றது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி அசத்த இருக்கின்றனர்.
கடந்த சுற்றில் போட்டியாளர் தேவாவின் சுற்று நடைபெற்றது.
இதில் எந்த எலிமினேஷனும் இருக்கவில்லை ஒரு வேளை இந்த வாரம் எலிமினேஷன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வாரம் மண்வாசனை சுற்று ஆரம்பமாக இருக்கின்றது.
இதில் போட்டியாளர்கள் 90ஸ் 80ஸ் கிராமத்து பாடலை பாடி நடுவர்கள் மற்றும் மக்களை மகிழ்விப்பார்கள். இந்த வகையில் இது தொடர்பான ப்ரொமோ காட்சிகளை பிரபல டிவி நிகழ்ச்சி வெளியிட்டுள்ளது.
இதில் தற்போது போட்டியாளர் ஸ்ரீகரி மற்றும் பவித்ரா பாடிய ப்ரொமோ காட்சி வெளியாகி இருக்கின்றது. இதில் பவித்ரா இது “சாயங்காலமா மடி சாயும் காலமா“ என்ற பாடல் வரிகளை பாட நடுவர் கார்த்திக் அசந்து போகிறார்.
கார்த்திக் நடுவராக இப்போது தான் சரிகமப நிகழ்ச்சியில் பங்கு பற்றி இருக்கிறார். பவித்ரா முதல் வார சுற்றிக்களில் கொஞ்சம் சொதப்பினாலும் இப்போது அவரின் தேன் குரலுக்கு அனைவரும் அடிமை.
இந்த பாடலை பாடி முடித்தவுடன் நடுவர் ஸ்வேதா எழுந்து மேடைக்கு ஓடிச்சென்று பவித்ராவை தூக்கி சுற்றும் காட்சி அரங்கத்தில் இருந்த அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |