பெண்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் நாடு எது? பாதியாக குறையும் அபாயம்!
தற்போது திருமணத்திற்கு பின்னர் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வது கணிசமாக குறைந்து வருகிறது.
மோசமான வாழ்க்கை முறை, கலாச்சார மாற்றங்கள், வேலைபளு, பொருளாதார நெருக்கடி, தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களின் விகிதம் குறைந்து வருகிறது.
திருமணத்திற்கு பின்னர் பெண்களும் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இது மக்கள் தொகையின் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான நிலையில் பெண்கள் அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் நாடுகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
பெண்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்ளும் நாடு
உலகளவில் உள்ள மக்களின் எதிர்காலத்தில் குழந்தை பிறப்பு பாரிய தாக்கம் செலுத்துகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் வாழும் பெண்கள் அதிக குழந்தைமான குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இந்த நாடுகள் பெண்கள் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் நாடாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக நைஜீரியா போன்ற நாடுகளில் வாழும் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதம் அதிகமாகியுள்ளது. அதே போன்று ஸ்பெயின், சீனா, போர்ச்சுகல், தாய்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளில் வாழும் மக்கள் தொகை குறைந்து வருவதால் இதனை ஊக்குவிக்கும் கொள்கைகள் கொண்டுள்ளன.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் உலகிலேயே மிகவும் அதிகமாக உள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் எதிர்வரும் 2100 ஆம் ஆண்டில் 300 கோடியாக அதிகரிக்கலாம் என கணிக்கிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை குறைந்து வரும் நாடுகள்
வளர்ந்து வரும் நாடுகளில் மக்கள் தொகை கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் அந்த நாட்டு அரசாங்கங்கள் தம்பதியருக்கு பணம் அல்லது சலுகைகளை வழங்குகின்றன.
சீனா, ஸ்பெயின், தாய்லாந்து, தென் கொரியா போன்ற நாடுகளின் மக்கள் தொகை பாதியாக குறையும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |