பாக்கியலட்சுமி கோபியின் நெருங்கிய நண்பர் இவர்தானாம்! அசந்து போன இணையவாசிகள்
பாக்கியலட்சுமி கோபி தன்னுடைய உயிர் நண்பருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் தற்போது இருக்கும் சீரியல்களில் பரபரப்பாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் ஆரம்பிக்கும் போதிலிருந்து இன்று வரை திருப்பங்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும், இந்த சீரியலில் நடிகர் சதீஸின் நடிப்பு பார்ப்பவர்களை அசற வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது பாக்கியலட்சுமியின் சீரியலில் பாக்கியாவை தரம் குறைத்து பேசி தற்போது எழிலிடமும், செழியனிடனும் அடி வாங்க சென்றுள்ளார்.
கோபியின் நெருங்கிய நண்பர்
இந்த நிலையில் சீரியல் ஒரு பக்கம் சென்றாலும், நடிகர் சதீஸ் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தினமும் ஒரு வீடியோ அல்லது புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார்.
அந்த வகையில் இயேசுவின் சிலையை கட்டிபிடித்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த போஸ்ட்டில் என்னுடைய “ நெருங்கிய நண்பர்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ கோபியின் அலப்பறைகளுக்கு அளவே இல்லை.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.