ஊருக்கு போகும் போது பாட்டி மறைத்து கொடுத்த பொருள்- பூரிப்புடன் வெளியான காணொளி
இந்திரஜா ரோபோ சங்கர் வெளியிட்ட காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவிலுள்ள நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ரோபோ சங்கர்.
இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.
பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான “மாரி” படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். தற்போது குடும்பத்துடன் சந்தோசமாக இருந்து வரும் ரோபோ சங்கர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்திரஜா போட்ட பதிவு
இந்த நிலையில் சினிமாவில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் குடும்பமாக சேர்ந்து சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில், கணவருடன் வெளியில் கிளம்பிய இந்திரஜா - கார்த்திக்கிற்கு அவரது பாட்டியொரு கையில் மறைத்து பணம் கொடுக்கிறார்.
இதனை இந்திரஜா, “ எவ்வளவு பணம் இருந்தாலும் பாட்டி கொடுக்கும் பணத்திற்கு ஈடாகுமா?” என பூரிப்புடன் பகிர்ந்திருக்கிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |