இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இவ்வளவு அழகான மகளா? ட்ரெண்டாகும் புகைப்படம்
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கே.எஸ். ரவிக்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படங்களை இயக்கியது கே.எஸ். ரவிக்குமார் தான்.
1990ம் ஆண்டில் புரியாத புதிர் படத்தில் தொடங்கி அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா, தெனாலி, பஞ்சதந்திரம், வில்லன், வரலாறு, தசாவதாரம் என பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனராக மட்டுமின்றி சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார். மேலும் தயாரிப்பாளராக சில படங்களை தயாரித்தும் வருகின்றார்.
சினிமாவில் கொடிகட்டி பறக்கும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், மூன்றாவது மகள் ஐஸ்வந்தியின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
ஐஸ்வந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கும், நிலையில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.
கேஎஸ் ரவிக்குமாரின் மகள் ஜஸ்வந்தி போட்டோவை பார்த்த இணையவாசிகள், அவருக்கு இவ்ளோ அழகான பொண்ணு இருக்காங்களா?.. என்றும் ஹீரோயினையே மிஞ்சும் அழகு.... படத்தில் நடிக்கலாமே.... என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |