எந்த மூஞ்சிய வச்சிட்டு நீ இங்க இருக்க.. கொந்தளித்த மாமியார்- வீட்டை விட்டு வெளியேறிய ஈஸ்வரி!
கோபி கடுமையாக நடந்து கொண்டதால் ஈஸ்வரி மனமுடைந்து போயுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் ராதிகா தவறி விழுந்ததால் அவர் வயிற்றிலுள்ள குழந்தை கலைந்து போயுள்ளது. இதனால் கோபி உட்பட அனைவரும் சோகத்தில் இருக்கிறார்கள்.
கோபியின் மாமியார், ஈஸ்வரியை கொலைக்காரி என்றெல்லாம் பேசி விடுகிறார். அந்த வார்த்தைகள் ஈஸ்வரிக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பதறும் பாக்கியா
இந்த நிலையில், பாக்கியா, ஈஸ்வரிக்கு கோல் செய்து விசாரிக்கிறார்.
ஏற்கனவே மனமுடைந்து அமர்ந்திருக்கும் ஈஸ்வரியால் பாக்கியாவிற்கு பதில் கூற முடியவில்லை. மாறாக ஈஸ்வரியின் பேச்சில் சோர்வு தெரிகிறது.
இதனால் தன்னுடைய மாமியாருக்கு ஏதாவது நடந்து விடுமோ? என்ற பயத்தில் வீட்டிற்கு வந்து வீட்டிலுள்ளவர்களிடம் பாக்கியா புலம்புகிறார். எழில், செழியன் என அனைவரும் ஆறுதல் கூறினாலும் பாக்கியாவிற்கு ஏதோ பயமாகவே இருக்கிறது.
இதனை தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ராதிகா மற்றும் கமலா இருவரும் ஈஸ்வரியை கடுமையாக திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதற்கு கோபியும் உடந்தையாக இருக்கிறார்.
வீண் பலியுடன் ஈஸ்வரி ராதிகா வீட்டிலிருந்து வெளியேறுகிறார்.
தன்னுடைய மாமியாரின் இந்த நிலைமை பார்த்த பாக்கியா இனி என்ன செய்ய போகிறார் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |