கிணறுகள் வட்டவடிவில் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
கிணறுகள் பெரும்பாலும் வட்ட வடிவில் இருப்பதற்கு நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு காரணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை தற்போது காணலாம். சில இடங்களில் கிணறுகள் சதுரம் மற்றும் செவ்வக வடிவில் வடிவில் காணப்படுகின்றதை நாம் அவதானித்திரப்போம்.
ஆனால் பெரும்பாலும் வட்ட வடிவிலேயே காணப்படும். இதற்கக் காரணம், வட்ட வடிவத்திற்கு, சதுரத்திற்கு இருப்பது போன்று நான்கு முனைகள் இருப்பதில்லை. ஏனைய பிற வடிவங்களுக்கும் முனைகள் இருப்பதால், இந்த முனைகளில் எவ்வளவு தான் பிடிமானம் இருந்தாலும் காலப்போக்கில் இடிந்து விழுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் அதுவே வட்ட வடிவமாக இருந்தால் அவ்வளவு எளிதில் இடிந்த விழாது. மேலும் வட்ட வடிவமாக இருப்பதால் கிணற்றினுள் சீரான அழுத்தம் பராமரிக்கப்படும். மேலும் வட்ட வடிவத்தின் சுற்றளவு பிற வடிவங்களின் சுற்றளவினை விட குறைவாகவே இருக்கின்றது.
இவ்வாறு சுற்றளவு குறைவாக இருப்பதால், வட்ட வடிவில் கிணறுகளை அமைப்பதற்கான செலவும் குறைவாக இருப்பது மட்டுமின்றி நீண்ட காலம் பயன்பாட்டிற்கும் இந்த வடிவம் இருப்பதாலே நம் முன்னோர்கள் இந்த வடிவத்தினை தெரிவு செய்துள்ளனர்.