அந்த குழந்தை யார் தெரியுமா? சர்ச்சை பேச்சுக்கு பதில் கொடுத்த சங்கீதா
நடிகர் ரெடின் கிங்ஸ்லியை சீரியல் நடிகை சங்கீதா திருமணம் செய்து கொண்ட நிலையில் தொடர்ந்து எழும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திருமணம்
தமிழ் சினிமாவில், தனித்துவமான திறமையால் குறுகிய காலத்தில் பிரபலமானவராகியவர் தான் நடிகர் ரெடின் கிங்கிலி.
இவருக்கு தற்போது 47 வயதாகிறது. சினிமாவில் பிஸியாக நடித்து கொண்டிருந்த கிங்ஸ்லி கடந்த வருடம் டிசம்பர் 10 ஆம் திகதி சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கிங்ஸிலிக்கு இது முதல் திருமணம் என்றாலும் அவரின் மனைவிக்கு இது இரண்டாவது திருமணம். அது மட்டுமல்லாது சங்கீதாவிற்கு ஷிவியா என்கிற மகள் ஒருவரும் இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வயதில் ஏன் திருமணம்? பணத்திற்காக தான் சங்கீதா - கிங்ஸிலியை திருமணம் செய்துகொண்டார்? உள்ளிட்ட பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிக் கிடந்தன.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமிபத்தில் சங்கீதா பேசியிருக்கிறார்.
“கிங்ஸிலிக்கும் எனக்கும் இப்போது தான் 18 - 22 என நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவரை நான் பணத்திற்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. நானும் ஒன்னும் இல்லாமல் இருப்பவள் இல்லை.
கிங்ஸிலியை காதலிக்க அவரின் நல்ல மனம் தான் காரணம். அத்துடன் வீடியோவில் என்னோடு இருந்தது என்னுடைய குழந்தை இல்லை. அவர் என்னுடைய சகோதரியின் குழந்தை.
இப்படியான கதைகளை தவிரப்பதற்காகவே இருவரும் வெளிநாடு போய் செட்டில் ஆகி விடலாமா என்று கூட தோன்றும்.” என கவலையாக பேசியுள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |