கண்ணீர் விட்டு கதறிய செழியன்: மனமிறங்கி ஜெனி எடுத்த முடிவு
ஜெனியிடம் செழியன் மனமிறங்கி மன்னிப்பு கேட்கும் போது ஜெனி எடுத்த முடிவு சீரியலை விறுவிறுப்பாக்கியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், தற்போது பாக்கியா - கோபியின் கதை முடிந்து ராதிகா - கோபியின் கதை ஆரம்பமாகியுள்ளது.
தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் கோபி இறங்கியுள்ளார். இதற்கு செழியன் மற்றும் எழில் இருவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மனமிறங்கிய ஜெனி
இந்த நிலையில் மாலினியின் விடயத்திலிருந்து வீட்டில் மிகவும் சோகமாக இருக்கும் ஜெனி, செழியனுக்கு இப்படி வேறு குழந்தை இருக்கிறதா? என குழப்பத்தில் இருக்கிறார்.
இந்த விடயம் தன் தவறை ஒப்புக் கொண்டு, இனியாவது குழந்தை, மனைவி என வாழ்வோம் என நினைக்கும் செழியனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
ஜெனி இப்படி நினைப்பதை அறிந்த செழியன் கண்ணீருடன் மன்னிப்பு கேட்கிறார்.
செழியன் அழுவதை பார்த்த ஜெனி மறுபடியும் தன்னுடைய கணவரை ஏற்றுக் கொள்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |