ஏ.ஆர்.ரகுமானின் இளைய மகள் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இளைய மகள் என்ன செய்கிறார்? என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான்
தமிழ் சினிமாவில் “ரோஜா” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான்.
இந்த திரைப்பட பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமான நிலையில், வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. காலங்கள் செல்ல செல்ல இளையராஜாவிற்கு இணையானவராக ஏ.ஆர்.ரகுமான் பார்க்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ரகுமான் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைக்க ஆரம்பித்தார்.
இசையமைப்பாளர், பாடகர் என அனைத்திலும் மக்களால் கவரப்பட்ட ரஹ்மான் இரண்டு தடவைகள் ஆஸ்கார் விருது பெற்றுள்ளார்.
சினிமாவில் பிஸியாக இருந்த காலப்பகுதியில் சையிரா பாணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கதீஜா, ரஹீமா என்கிற மகள்களும், ஏ.ஆர்.அமீன் என்கிற மகனும் உள்ளனர்.
தற்போது வளர்ந்து பெரியவர்களாக இருக்கும் பிள்ளைகள் தந்தையை போல் இசையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இளைய மகள் என்ன செய்கிறார்?
இந்த நிலையில் அவரின் இளைய மகள்- ரஹீமா பட்டம் வாங்கும் புகைப்படமொன்றை ரகுமான் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும் ரஹீமாவை நினைத்து பெருமையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, ரஹ்மானின் இரண்டு குழந்தைகளும் சினிமா பக்கம் பிஸியாக இருக்கும் நிலையில் ரஹீமா மாத்திரம் சினிமா பக்கம் தலைக்காட்டாமல் துபாயில் கேட்டரிங் படிப்பை முடித்துள்ளாராம்.
இதற்கான பட்டமளிப்பு விழா கடந்த தினங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவிற்கு தந்தை ஏ. ஆர் ரஹ்மான் கலந்துக் கொண்டு தன் மகளுக்கு அவர் கையால் பட்டம் கொடுத்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தான் ஏ. ஆர். ரகுமான் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.