உள்ளங்கைகளில் அதிகமா வியர்க்குதா? அலட்சியப்படுத்தாதீங்க இந்த நோய் அறிகுறியாக இருக்கலாம்
பொதுவாக உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது சாதாரண விடயம் தான். ஆனால் சிலருக்கு உள்ளங்கைகளில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறும்.
இன்னும் சொல்லப்போனால் இவர்களின் அன்றாட வேலைகளை கூட பாதிக்கும் அளவுக்கு உள்ளங்கைகளில் வியர்ப்பது பிரச்சினையாக இருக்கும். அதனால் மற்றவர்களுடன் கை குளுக்குவதற்கு கூட தயக்கம் ஏற்படும்.
இவ்வாறு உள்ளங்கைகளில் அதிகமாக வியர்வை வெளியேற என்ன காரணம் என்பது குறித்தும் இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம் எனவும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
மருத்துவ நிபுணர்கள் உள்ளங்கையில் வியர்வை வெளியேறுவதை இரண்டு வகையாக பார்க்கின்றனர். முதலாவது நிலை பிரைமரி ஹைப்பர்ஹைட்ராசிஸ் என்றும் இரண்டாவது செகண்டரி ஹைப்பர்ஹைட்ராசிஸ் என்றும் வகைப்படுத்தப்படுகின்றது.
இதில் பிரைமரி ஹைப்பர்ஹைட்ராசிஸ் என்பது சாதாரணமான நிலை தான். அதாவது குழந்தையிலிருந்தே மரபணு காரணமாகவோ, பருவ மாற்றம், பதட்டம், கோபம் போன்ற உணர்ச்சி நிலை, சுற்றுச்சூழல் போன்ற காரணங்களினால் உள்ளங்கை அதிகமாக வியர்க்கும்.
ஆனால் செகண்டரி ஹைப்பர்ஹைட்ராசிஸ் எனும் நிலை உடலில் ஏற்பட்டுள்ள குறிப்பிட்ட சில நோய்களுக்கு உடல் வெளிப்படுதும் அறிகுறியாகவே இது பார்க்கப்படுகின்றது.
உதாரணமாக தைராய்டு ஹார்மோன் குறைபாடு, நீரிழிவு நோய், போன்றவற்றின் பிரதான அறிகுறியாகவும் அவ்வாறு வியர்வை வெளியேறும்.
அதற்கு தீர்வாக ஆண்டிபெஸ்பைரண்ட் ( antiperspirant ) என்னும் கிரீம் மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கின்றனர். இது வியர்வை வெளியேற்றத்தை தடுக்க உதவுகின்றது.
மேலும் பாட்டலினம் டாக்சின் ( botulinum toxin) என்னும் மருந்து வியர்வை சுரப்பிகளை தற்காலிகமாக செயலிழக்க செய்கின்றது. இந்த மருந்துகளை இவ்வாறான பிரச்சினை இருப்பவர்கள் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அல்லது microneedling radio frequency treatment சிகிச்சை மூலம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும் இவ்வாறு உள்ளங்கை வியர்க்கும் பிரச்சினை இருப்பவர்கள் முறையாக உணவுப்பழக்கத்தை பின்பற்ற வேண்டியது அவசியம்.
எந்த உணவு சாப்பிட்டால் அதிகமாக வியர்வை வெளியேறுகின்றது என அவதானித்து அவ்வகையான உணவுகளை தவிர்த்துக்கொள்வதும் இதற்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |